உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்.djvu/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

எட்டிரண்டு மறியாதார் குருக்களாமோ
யென்னையினி பறையனென்று தள்ளப்போமோ
மட்டமரும் பூங்குழல்வா லாமபிகைப்பெண்
வங்கிஷத்திலுதித்த சாமபவனும் நானே."

இவைப்போன்ற அநேக பாடல்கள் திராவிடர் பௌத்த கவிஞர்கள் வரைந்துளார்.

மற்ற திராவிட புலவர்களும் அம்மாதிரியே வரைந்துளார். சித்தா்கள் பிராமணர் ஏற்படுத்திய ஜாதிவித்தியாசங்களுக்கும் பிராமணா வேதங்களுக்கும் ஆசாரங்களுக்கும் விரோதிகள் அவர்கள் "பறையா" என்போரை உயர்த்த முயன்றார்கள்.

உதாரணமாக குதமபைசித்தர் சொல்லுகிறார்.

குதமபைச் சித்தர் பாடல்

" ஆண்சாதி பெண்சாதி யாகுமிரு சாதி
வீண்சாதி மற்றசெலலாங் குதம்பாய் - வீண்
பார்ப்பார்கள் மேலென்றும் பறையோர்கள தீழென்றும
தீர்ப்பாகச சொலவசென்ன குதமபாய்- தீழ்ப்பா
கர்ததன் பறையோரைப் பாப்பாரைப் போலவே
தாப்பாய் படைத்தாரோடி குதம்பாய் - தீழ்ப்பா"

பத்திரகிரியார் தமமிட புலம்பலில.

"ஆதிகபிலர் சொன்ன யாகமத்தின் சொற்படியே
சாதிவரையிலலாமற் சஞ்சரிப்பசெககாலம.

இன்னொரு புலம்பலில்,

"சாத்திரத்தை சுட்டு சதுர் மறையை பொய்யாக்கி
சூத்திரத்தைக்கண்டு சுகமபெருவ தெக்காலம்,

என்றார் .

தேவி காலோத்திரத்திலேயே அடியில் கண்ட பாடலிருக்கிறது.