30
கள். ஆங்கிலேய நாகரீகமும் கல்வியும் இத்தேசத்திற்கு வந்தபிறகு எல்லாரும் கண்திறந்து கொண்டார்கள். ஆயினும் பூர்வகாலத்தைப்போல் தற்காலத்தில் மூடர்களிருப்ப தால் முழுமையும் நீக்கக்கூடாமலிருக்கிறது. ஆயினும் ஆசார சீர்திருத்தக்காரர் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க முயர்ச்சி செய்கின்றனர் ஆதி திராவிடரை விர்த்திசெய்ய ஆரிய சமாஜம் அதிக பிரயத்தனப்படுகிறது எவறாயினும் ஆரிய சமாஜத்தில் சேர்ந்தால் அதைச் சேர்ந்தவர்கள் அவனை சமமாக ஏற்றுக்கொள்ள தயாரா யிருக்கிறார்கள். அநேக அத்தேசத்து பஞ்சமர்கள் அதில் சேர்ந்திருக்கிறார்கள். இன்னம் ஒருசபை பிரமசமாஜ் என்பது இவர்களுக்கு கூட ஜாதி வித்தியாசம் கிடையாது. ஆனால் சென்னப் பட்டணம் பிரமசமாஜகதார் ஜாதியை ஒழிக்கவில்லை இவர்களும் பஞ்சமர்களுக்கு அதிகமாய் உழைக்கிறார்கள். தாழ்த் தப்பட்டவர்களை உயர்த்த Depressed Classes Mission பல இடங்களில் இந்தியாவில் தற்காலத்தில் எற்பட்டுவருகின்றன. கிரிஸ்து மதமும் மகமத்திய மதமும் அநேக ஆதி திராவிடர்களுக்கு நன்மைகள் செய்திருக்கின்ன. ஆங்கிலேய கவர்ன்மென்டாரும அநேக நன்மைகள் செய்திருக்கி றார்கள். இனி செய்யவும் போகிறார்கள்.
ஆதி திராவிட சகோதரர்களே! நீங்கள் மாட்டிறைச்சி உண்பதினாலேயே உங்களுக்கு தாழ்மை இக்காலத்தில் உண் டாகாது. இந்துக்களிலேயே மாட்டிறைச்சி சாப்பிடும்