பக்கம்:ஆத்மஜோதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்மஜோதி - 339

ஆயினும் அவளது உள்ளத்தில், அதாவது கருத்தில் ஆழ்ந்த அகன்ற மதுரபாவமே பெருக்கெடுத்து ஒடுகின்றது. மேலாகப் பார்த்தால் அவைகளைப் புரிந்து கொள்ள இயலாது. நவீன பண்டிதர்கள், 'இது ஒரு அகப் பொருட் துறை இலக்கியம்' என்று மாத்திரம் கூறி விடுவர். அதற்குமேல் இவர்களால் இயலாது! அவளது குறிக்கோளைச் சமூக பரிபாஷையில் துவைத்து, கவியின்பம் துலங்கக் கூறும் அழகைப் பாருங்கள்:- -

'தந்தையும் தாயும் உற்ருரும் நிற்கத்

தனிவழி போயினுள் என்னும் சொல்லு வந்த பின்னப் பழிகாப்பு அரிது; : மாயவன் வந்து உருக்காட்டுகின்றன்; கொந்தளம் ஆக்கிப் பரக்கழித்துக்

குறும்பு செய்வான் ஒர் மகனைப் பெற்ற நந்தகோபாலன் கடைத்தலைக்கே

நள் - இருட்கண் என்னை உய்த்திடுமின்

என்று அவள் கூறும் இவ்வாக்கின் வன்மை என்னே! ‘மாயவன் வந்து உருக்காட்டுகின்றான்’ என்பதே அவளது அனுபூதி! அதை அடைவதே ஒவ்வொரு ஜீவனின் குறிக் கோளாகும். தனது சாதனைக் காலத்தில் அற்புத திருக் காகதிகளையும், கனவுகளையும், தெய்வீகத் தொடர்புகளையும் அனுபவிக்கிறாள், ஆண்டாள். இதையே அவளும் தம்மை யொத்த பெண்ணுலகுக்குக் காட்டி, அவர்களேயும் பார மார்த்திகப் பெருவாழ்விற்குத் தட்டியெழுப்புகிறாள். தமது திருப்பாவையில்:- ... • - -

நங்காய் எழுந்திராய், நாளுதாய் நாவுடையாய் சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் - பங்கயக் கண்ணுனைப் பாடு’ என்றும்,

'எல்வே, இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?” என்றும் 'மனத்துக்கு இனியானைப்பாடவும் வாய்திறவாய்' என்றும் 'இனித்தா னெழுந்திராய் ஈதென்ன பேறுறக்கம்" என்று உபநிஷத் வாக்கைப்போல் "உத்திஷ்ட்டத ஜாக்ரத ப்ராப்ய வராக்

நியோதத, என்று பாரமார்த்திகத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆத்மஜோதி.pdf/21&oldid=1544629" இலிருந்து மீள்விக்கப்பட்டது