340
ஆத்மஜோதிள்
தூங்கும் அனைவரையுமே எழுப்புகிறான்.இவளை விட சிறந்த ஆசார்ய சீலர் யார்? என்னே பரோபகார சிந்தை!!
ஸ்ரீ மணிவாசகப் பெருமானும் ஆண்டாளும் பக்தி சாஸ்திரத்திற்குத் தலையாய இலக்கணமாய் அமைந்து உயர்ந்த இலக்கியத்தை பாவைப் பாக்கள் மூலம் தந்துள்ளனர். தனது குறிக்கோளை அடையும் சாதனையில் மூழ்கிய ஆண்டாள் நோற்ற நோன்பின் காரணமாய் உண்டானதே திருப்பாவை என்ற திவ்ய பிரபந்தம்.
திருப்பாவை ஓர் "உபநிஷத்ஸாரம்” என்பது ஆன்றோர் சித்தாந்தம். உயர்ந்த உபநிஷத் கருத்துக்களையும் உபதேசங்களையும்தன்னகத்தே கொண்டுள்ளது. வைஷ்ணவ ஆசார்யரான பூரீ மத் ராமானுஜர் திருப்பா வையைப் பாராயணம் செய்தே, 'திருப்பாவை ஜீயர்' என்ற ஒரு பட்டப் பெயரைப் பெற்ருர். "கவி வாதி சிங்கம்” என்று பெயர் பெற்ற பூரீமந் வேதாந்த தேசிகரும் திருப்பாவை யில் ஈடுபட்டு, இதை "ஆண்டாள் உபநிஷத்" என்று போற்றுகின்றார்.
விஜய நகர சக்கரவர்த்தியான பூரீ கிருஷ்ண தேவரா யரும் திருப்பாவையில் ஈடுபட்டவராய் தன் நூலில் ஆண் டாளை "ஆமுக்த மால்யதா என்று குறிப்பிடுகிருர். வேதாந்த தேசிகரின் கோதா ஸ்துதி”, என்ற வடமொழி கிரந் தத்தின் மூலம் வடநாடெங்கும் ஆண்டாள் பக்தியும்கொள் கையும் பரவலாயிற்று. எனவே திருப்பாவை மூலம் உணர்த்தும் அரிய உபதேசமே ஆண்டாள் நமக்களிக்கும் அருள்
இலெளகீய வாழ்விற்கு வேண்டியது உணவு, உடை, செல்வம் முதலானவை. இத்தோடு பாரமார்த்திகத்திற்கு வேண்டியது அகப் - புறத்துாய்மை, தெய்வபக்தி ஆத்மீய சாதனை முதலானவை. நாட்டில் மழை பொழிய, உணவு தானியங்கள் செழித்து வளர, பசுக்களும் பால் நிறைந்து கொடுக்க சமூகத்தில் செல்வம் கொழிக்கும் தானே! ஆகவே தெய்வீக வாழ்வான "நிஸ்ரேயஸ்சம்” மற்றைய சமூக சீர்மைகளாகிய அப்யுதயமும்” வேண்டி 3ம்பாட்டில் பிரார்த் திக்கின்றாள்:-
"ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்