ஆத்மஜோதி - - 343 'படாத காலிலும் படும்'
(கி. வா. ஜ.) ஜூEைஇங்ங்குவதுைகளுகலாக, !
இது மண்டையை உருட்டி மூளையை முடுக்கிச் செய்யும் தத்துவ ஆராய்ச்சி அல்ல. தினந்தோறும் வாழ்க்கையிலே நடக்கும் சமாசார்ந்தான்; உண்மையான செய்தி; , காலிருப்பவர்களும் கருத்திருப்பவர்களும் தெரிந்துகொண்ட" பழைய சமாசாரந்தான். ஆனால் இதைப் பற்றித் தனி, யாக யோசித்ததில்லை; அதனுல் இந்த விஷயம் இப்போதைக்குப் புதுமையாக இருக்கலாம்.
பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்' என்ற பழமொழியைப் பாட்டியும் சொல்கிறாள்; பேதறான். வேதாந்தியும் சொல்கிறான்; சம்சாரியும் சொல்கிறான். எல்லோருடைய வாக்கினலும் பலகோடி, நூருயிரந் தடவை உச்சரிக்க்ப்பட்டு இந்தப்பழமொழி இப் போது ஒரு மந்திரத்தைப் போல வழங்கி வருகிறது. நல்ல: வேளையாகப் பட்ட காலிலே படும்' என்று மாத்திரம் சொன்னர்களே ஒழிய அதிலே ஒரு தானேக் கலந்து குழப்பி வைக்கவில்லை; பட்ட காலிலேதான் படும்’ என்று சொல்லி, யிருந்தால் அதற்கு மேலே சிந்திக்கவே இடமில்லை. .
எனக்கு இங்கே ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது. பொடுதலை என்பது ஒரு பச்சிலை. அதைச் சில புண்களுக்கு வைத்துக் கட்டுவார்கள். வழுக்கைத் தலையைக் கூடப் பொடுதலை என்று சொல்லலாம், ஒரு வைத்தியர் யாரோ ஒரு மடசாம்பிராணியின் பிள்ளைக்கு வைத்தியம் பண்ணி னார். அந்தப் பிள்ளைக்குக் காலில் புண், பொடுதலையை வைத்துக் கட்டு' என்று வைத்தியர் உத்தரவு செய்து போய் விட்டார். அந்த மனுஷனுக்குப் பொடுதலை என்ற மூலிகை இருப்பது தெரியாது. யாரோ ஒரு வழுக்கைத் தலையு டைய சாது ஒருவர் ஊருக்கு வந்திருந்தார். அவ்ர் தலை, யைப் பார்த்த உடனே அந்த மனுஷனுக்குச் சந்தோஷம் கரை கடந்து விட்டது. அவரை ஆசார உபசாரம் செய்து அழைத்து வந்து சமயம் பார்த்துப் பெரியவரை அமுக்கிப் பிடித்துத் தன் பிள்ளையின் காலோடு அவர் தலை சேரும்