பக்கம்:ஆத்மஜோதி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 344 . ஆத்மஜோதி

ագ வைத்துக் கட்டி விட்டான். பெரியூவர் ஒன்றும்பண்ண

முடியாமல் அந்த நோயாளிக்கு அருகிலே கிடந்தார்.

. நல்ல வேளையாக அன்று மாலேயே வைத்தியர் வந்தார். நோயாளியின் காலோடு பெரியவரைக் கட்டியிருந்த அலங் கோலத்தைப் பார்த்தார். என்ன ஐயா இது?' என்று கேட்ட்ார். 'உங்க்ள் உத்தரவுப்படியே செய்திருக்கிறேன்" என்று பல்லே இளித்துக் கொண்டே விஷயத்தைச் சொன் னான். வைத்தியர், அட முட்டாளே! முதலில் அந்தப் பெரியவரை அவிழ்த்து விடு' என்று கடிந்து கொண்டார். அவன் கட்டவிழ்த்து விட்டான். , -

சாதுவான அந்தப் பெரியவருக்கு அப்போதுதான் விஷ

யம் விளங்கியது. வைத்தியர் காலில் விழுந்து, மகானு பாவா, இன்று உங்களால் நான் உயிர் பிழைத்தேன்' என்று சொன்னர் வைத்தியர், 'ஏதோ தெரியாமல் செய்துவிட்டான்' என்று வருத்தக் குறிப்போடு அவரைச் சமாதா னம் செய்யலானர். பெரியவர், 'அதெல்லாம் இருக்கட்டும், உங்கள் திருவாக்கினல்தான் நான் பிழைத்தேன். நீங் கள் பொடுதலையை வைத்துக் கட்டு என்று சொன்னதால், நான் உயிர் வாழ்கிறேன். பொடுதலையை நறுக்கி வைத்துக் கட்டு என்று சொல்லியிருந்தால் என்நிலை என்ன ஆக யிருக்குமோ, சர்வேசுவரனுக்குத்தான் தெரியும்'என்றுசொல்லிப் போய்விட்டாராம். அந்த மாதிரி பட்ட காலிலேதான் 'படும் என்று சொல்லாமற் போனார்களே. அதற்காகச் சந்தோஷப்பட வேண்டும்.


தினமும் நாம் எங்கெங்கோ நடக்கிறோம். மேட்டிலும் பள்ளத்திலும், சரளைக்கல் பரப்பின பாதையிலும், தார். ரோட்டிலும் நடக்கிறோம். வாசற்படியில் ஏறுகிறோம்: புறக்கடையில் இறங்குகிறோம். அப்பொழுதெல்லாம் நம் முடைய காலில் கண் இருக்கிறதா, என்ன, ஒன்றும்படா ம்ல் இருக்க காலிலே காயம்பட்டுவிட்டால் மட்டும் அந் தக் கண் கெட்டுப் போய், பட்ட காலிலே பட்டுக்கொண்டேயிருக்கிறதா? யோசித்துப் பாருங்கள். நமக்குக் கால் இருக்கிறவரையில், எங்கேயாவது பட்டுக்கொண்டேதான் இருக்கும். ஆனால் அப்படிப் படும்போதெல்லாம் நாம் அதைக் கவனிக்கிறது இல்லை. நம்முடைய மூளைவரையில் அந்தச் செய்தி எட்டுவ்தில்லை. எங்கேயோ ஒரு சின்னக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆத்மஜோதி.pdf/26&oldid=1544634" இலிருந்து மீள்விக்கப்பட்டது