நா. பார்த்தசாரதி 99 கீழேயிருந்து முத்திருளப்பனும், மேலே மொட்டை மாடியிலிருந்து உள்ளே இறங்கும் படிகளில் அவளும் ஒரே சமயத்தில் உள்ளே நுழையவே, ராஜாராமனுக்குத் தர்மசங்கடமாகப் போயிற்று. ஆனால் முத்திருளப்பன் சங்கடப்பட வில்லை. 'செளக்கியமா அம்மா' - என்று மதுரத்தை விசாரித்தார் அவர். காபியை ராஜாராமனிடம் கொடுத்துவிட்டு, முத்திருளப்பனை வணங்கினாள் மதுரம்.
'உங்களுக்கும் கொண்டு வரேன் அண்ணா...' 'வேண்டாம்! நான் இப்பத்தான் சாப்பிட்டேன் அம்மா'
ராஜாராமன் ஆச்சரியப்பட்டான். தன் மனத்துக்குத் தான் இல்லாத பயங்களும், தயக்கங்களும் வந்து தொலைக்கின்றன போலும்! மதுரம் வந்து காபி கொடுப்பதைப் பார்த்து முத்திருளப்பன் சந்தேகப்படாமல் சுபாவமாகக் குசலம் விசாரிக்கிறார். மதுரம் பதறாமல், பயப்படாமல் அவரிடம் பேசுகிறாள். தன் மனப்போக்கிற்காக வெட்கினான் அவன். பத்தர் முத்திருளப்பனை ஏற்கனவே அவளுக்கு அறிமுகப்படுத்தியிருக்க வேண்டுமென்று தோன்றியது.
'உங்க சிநேகிதருக்குச் சொல்லுங்கண்ணா ரொம்ப அலையறார். இளைச்சுக் கறுத்துப் போயாச்சு...'
"என்னப்பா ராஜா, சொல்றது காதிலே விழுந்ததா?”
'உன்னைத்தானாப்பா, காதில் விழுந்ததா?"
'விழுந்தது' என்று சொல்லிக் கொண்டே டபரா டம்ளரை மதுரத்திடம் நீட்டினான் ராஜாராமன்.
'என்ன ஒரு புடவைக்குச் சிட்டம் போட்டாச்சா
அம்மா பேஷ் நாளைக்கு இன்னும் கொஞ்சம் பஞ்சு -கொணர்ந்து தரட்டுமா?’’ * , . . . .