பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 ஆத்மாவின் ராகங்கள்

நினைத்ததுபோல் திருவாதவூரிலேயே அதிக நேரம்

ஆகிவிட்டது. குத்தகைக்காரன் பேச்சுவாக்கில் ஒரு

யோசனையை ராஜாராமன் காதில் போட்டு வைத்தான்.

"வள்ளாளப்பட்டி அம்பலக்காரர் ஒருத்தரு இந்த நிலம், மேலுர் வீடு எல்லாத்தையும் மொத்தமா ஒரு விலை பேசிக் கொடுக்கற நோக்கம் உண்டுமான்னு கேட்கச் சொன்ன்ாரு. நீங்களோ பொழுது விடிஞ்சா ஜெயிலுக்குப் போறதும், வாரதும், மறுபடி ஜெயிலுக்குப் போறதுமா இருக்கீங்க. பெரியம்மா இருந்தவரை சரிதான். இனிமே இதெல்லாம் நீங்க எங்கே கட்டிக் காக்க முடியப் போகுது?"

மேலூர் புறப்பட்டு வரும்போது ராஜாராமனுக்கே இப்படி அரைகுறையாக மனத்தில் ஒரெண்ணம் இருந்தது. இப்போது குத்தகைக்காரனும் அதே யோசனையைச் சொல்லவே, என்ன நிலம் வீடு வாசல் வேண்டிக் கெடக்கு, எல்லாவற்றையும் கொடுத்து விட்டால் என்ன?’ என்று தோன்றியது. உடனே அது சம்பந்தமாகக் குத்தகைக்காரனிடம் மேலும் அக்கறையோடு விசாரித்தான் ராஜாராமன்.

'வள்ளாளப்பட்டிக்காரர் என்ன விலைக்கு மதிப்புப் போடறாரு?" - - - -

"அதெல்லாம் நான் பேசிக்கிடலிங்க வேணா இன்னிக்கு ராத்திரி பார்த்துப் பேசலாம். ரெண்டு நாளா அவரு மேலுர்ல தான் தங்கியிருக்காரு.'

குத்தகைக்காரனையும் கூட அழைத்துக் கொண்டே திருவாதவூரிலிருந்து மேலூர் புறப்பட்டான் ராஜாராமன். அன்றிரவு வள்ளாளப்பட்டி அம்பலத்தார் அவனைப் பார்க்க வந்தார். ராஜாராமனை அவர் பார்க்க வந்த போது, அவன் தனக்கு மிகவும்வேண்டிய மேலுார்த் தேசத் தொண்டர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தான். வலது கையில் முறுக்குப் பிரி அளவுக்குத் தங்கக் காப்பும், காதுகளில் சிவப்புக்