நா. பார்த்தசாரதி 127 பகல் சாப்பாட்டை முடித்துக் கொண்டு புறப்படும் போது மணி பன்னிரண்டு ஆகிவிட்டது. சப்-ரிஜிஸ்திரார் ஆபீஸ் படியிலிருந்து இறங்கியபோது மனத்தை அரித்த உணர்வு, ஊரிலிருந்து புறப்படும்போது ஏற்பட்டது. மேலுர் வீட்டுப் பரணியில் மதுரையிலிருந்து ஒழித்துக் கொண்டு போய்ப் போட்டிருந்த பண்டம் பாடிகளை மீண்டும் மதுரைக்குக் கொண்டு வர நண்பர் பொறுப்பு எடுத்துக் கொண்டார்.
மாலையில் அவன் மதுரை திரும்பியதும், நேரே வாசக சாலைக்குத் திரும்பி மதுரத்திடம் பணத்தைச் சேர்த்து விட எண்ணினான். அவன் வாசகசாலைக்கு வந்தபோது, பின்பக்கத்து மாடியில் வீணை வாசித்துக் கொண்டிருப்பது கேட்டது. -
'சரி, அவள் வீணை வாசித்து, முடிந்துவிட்டு வருகிறவரை சர்க்காவில் நூற்கலாம் என்று உட்கார்ந்தான் அவன். முதலில் எடுத்த பஞ்சுப் பட்டையை முடித்து விட்டு, இரண்டாவது பட்டையை எடுத்தபோது பத்தர் மேலே வந்தார். - -
'என்ன ரெஜிஸ்திரேஷன் முடிஞ்சுதா தம்பி பாக்கிப் பணம்லாம் வாங்கியாச்சா?'
'எல்லாம் முடிஞ்சுது பத்தரே! மதுரத்துக்கிட்டப் பணத்தைக் கொடுக்கணும். அது வீணை வாசிச்சுக் கிட்டிருக்குப் போலேருக்கு.தொந்திரவு பண்ண் வேண்டாம். தானா வாசிச்சு முடிச்சிட்டு வரட்டும்னு சர்க்காவை எடுத்து வச்சுக்கிட்டு உட்கார்ந்தேன்.' -
'அது இப்ப வந்துடுங்க தம்பி திடீர்னு எதிர்பாராம ஜமீன்தார் . யாரோ அவர் சிநேகிதனாம் ஒரு வெள்ளைக் காரனையும் கூப்பிட்டுக்கிட்டு வீணை கேட்கணும்னு வந்து உட்கார்ந்திட்டாரு. மத்தியானம் வரை நீங்க வந்தாச்சா வந்தாச்சான்னு கால் நாழிகைக்கொரு தரம் கேட்ட வண்ணமாயிருந்திச்சு. பன்னிரண்டு மணிக்கு முத்திருளப்பன்