128 ஆத்மாவின் ராகங்கள் வந்தாரு. அவருக்கிட்டக்கூட நீங்க மேலுாருக்குப் போனதைப் பற்றித் தான் பேசிக் கிட்டிருந்தது.”
'அப்புறம் நாகமங்கலத்தார் வந்ததும் - நான், நீர், முத்திருளப்பன் எல்லாருமே மறந்து போய்ட்டோமாக்கும்.'
'சே! சே! அப்பிடி எல்லாம் பேசப்படாது ஜமீன்தார் பேரை எடுத்தாலே, உங்களுக்கு உடனே மதுரத்து மேலே கோபம் வந்துடுது. அது என்ன செய்யும் பாவம்! ஜமீன்தாருக்கு முன்னாடி வீணை வாசிச்சாலும், உங்க ஞாபகத்திலே தான் வாசிக்குது அது! அதை நீங்களாவது புரிஞ்சுக்கணும்...' - - -
'நான் புரிஞ்சுக்கலேன்னு சொல்லலியே இப்ப...' "புரிஞ்சுக்கிட்டுத்தான் இப்படி எல்லாம் பேசlங்களா தம்பீ' : - -
'சரி சரி! அந்தப் பேச்சை விடுங்க, நான் கொஞ்சம் கோவில் வரை போயிட்டு வரேன். - என்று. சர்க்காவை: ஒரமாக வைத்துவிட்டுக் கீழே இறங்கிக் கோவிலுக்குப் புறப்பட்டான் ராஜாராமன். . . . . . .
மீண்டும் அவன் திரும்பி வந்தபோது இரவு ஏழு மணிக்கு மேலாகிவிட்டது. அவன் மாடிக்குப் போனபோது பத்தர் உட்புறம் நாற்காலியிலும் மதுரம் மொட்டை மாடியிலிருந்து உள்ளே வரும் முதற்படியிலுமாக உட்கார்ந்து இருவருமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். . . . . .
உள்ளே வரும் அவனைப் பார்த்ததும் மதுரம் பவ்யமாக எழுந்து நின்றாள். முழு அலங்காரத்துடன் பரிபூரண செளந்தரியவதியாக எழுந்து நின்ற அவனைப் பார்த்தவுடன் அவள் அவ்வளவு நேரம் ஒரு ஜஸ்டிஸ் கட்சி ஜமீன்தார் முன்னிலையிலும், ஒரு வெள்ளைக்காரன் முன்னிலையிலும் வீணை வாசித்துவிட்டு வந்திருக்கிறாள் என்பதையொட்டி அவளிடம் அவனுக்கு ஏற்பட்டிருந்த உள்ளடங்கிய