உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 205

'உடம்பு, மனசு எல்லாம் தான் சரியாயில்லே. ஒருத்தரிட்ட இருந்தும் கடிதாசு இல்லே. நானும் ஒருத்தருக்கும் கடிதாசு போட முடியலே. பார்க்கவும் முடியலே. அதுனாலேயே தவிச்சுப் போனேன்..."

நான் உனக்கு ரெண்டு மூணு கடிதாசு போட்டேனே, ராஜா. பத்தர் காலமானது பற்றி, மதுரத்தோட அசெளக்கியம் பற்றி, ஆசிரம நிலைமை பற்றி எல்லாம் எழுதியிருந்தேனே?...!! - -

'ஜெயில்லே சென்சார் ரொம்பக் கடுமை. ஸ்காட்னு ஒரு கிராதகன் அமராவதியிலே ஜெயில் அதிகாரியா இருந்தான். யாருக்கும் கடிதம் வரவும் விடலை. யாரும் கடிதம் போடவும் விடலை, எங்களுக்கு உலகமே தெரியாதபடி பண்ணிப்பிட்டான். நாடு கடத்தி ஏதோ தீவுலே கொண்டு போய் வச்சமாதிரி இருந்தது."

'சொல்ல முடியாத கஷ்டம்ா இருந்திருக்கும். ரெண்டரை வருஷத்துக்கு மேலே நரக வேதனை அநுபவிச்சிருப்பே. இங்கே எங்களுக்கெல்லாம் சதா உன்னைப் பற்றித்தான் நெனைப்பு. நாங்க மனசுனாலே தான் உன்னை நெனைச்சுக் கவலைப்பட்டோம். மதுரமோ மனசு, உடம்பு எல்லாமே உருகித் தவிச்சுத் தவிச்சு மாஞ்கது. இப்பிடி ஒரு பிரியம் வச்சுத் தவிக்கிற மனித ஜன்மத்தை உலகத்துலே பார்க்கவே முடியாது. மாந்தோப்பை ஆசிரமத்துக்கு எழுதிக் கொடுத்தப்பவும் சிரிச்சிக்கிட்டே கொடுத்தது. நீ தனிப்பட்டவர் சத்தியாக்கிரகத்திலே ஜெயிலுக்குப் போயிருந்தப்ப வீட்டை அடமானம் வச்சு ஆசிரமச் செலவுக்குப் பணம் கொடுத்தப்பவும் சிரிச்சுக்கிட்டே கொடுத்தது. கடைசியா, வீடு ஜப்திக்கு வந்தப்பவும் சிரிப்பு மாறாத முகத்தோடதான் வர்டகை வீட்டுக்குப் போச்சு. மங்கம்மாக் கிழவியும், மாமனும் போய்த் துக்கம் தாங்காம தனியா இருந்ததும் நீ ஜெயிலுக்குப் போயிட்டதுமாச் சேர்ந்தே அதை உருக்கி ஒடுங்கப் பண்ணிட்டது. மனசை உருக்கற பிரியத்தைப் பார்த்திருக்கேன். உடம்பை உருக்கற