பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/208

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


206 ஆத்மாவின் ராகங்கள் பிரியத்தைப் பார்த்திருக்கேன். இந்தப் பிரியமோ மனசு, உடம்பு, எலும்பு அத்தனையையும் உருக்கியிருக்கு. தங்க விக்கிரகமா இருந்தவ எப்படியோ இளைச்சு உருகிப் போயாச்சு. நீ பார்த்தா அப்படியே அழுதுடுவ. அந்த ஜமீன்தாரிணி வந்து பிடிவாதமாகக் கூப்பிட்டுக்கொண்டு போயிருக்காட்டா மதுரம் பிழைக்கறதே சிரமம். தயங்காம எங்ககூட வாம்மா! நீ என் வயிற்றிலே பொறக்காட்டாலும் நீயும் என் பொண்தான். எப்ப எப்பவோ உங்கம்மாவுக்கும் எனக்கும் அப்பா உயிரோட இருந்தப்ப மனஸ்தாபம் இருந்திருக்கலாம்; நானே அந்த மனஸ்தாபத்தை எல்லாம் மறந்தாச்சு. நீயும் மறந்துடனும். என் பிள்ளை - தூர தேசத்துக்குப் படிக்கப் போயிருக்கான். பெண் கலியாணமாகிப் புருஷன் வீட்டோட மெட்றாஸ் போயாச்சு. நீ இங்கே மதுரையிலே தனியாக் கிடந்து உருகறமாதிரி நான் அங்கே நாகமங்கலத்திலே கடல்போல் அரண்மனையிலே கிடந்து தவிக்கிறேன். நீ அங்கே வந்தா என் மனசும் குளிரும்; உன் உடம்பும் தேறும் னு வந்து கூட்டிண்டு போயிட்டா அந்தம்மா. நீ ஜெயில்லேருந்து வந்து உன்னைப் பார்க்கணும்னு இங்கே தவிச்சுட்டிருந்தது அது. அதுக்கு நாகமங்கலம் போக மனசே இல்லே. நானும் எங்க வீட்டுக்காரியும் கண்டிச்சுச் சொன்னோம். அப்புறம் தான் ஜமீன்தாரிணியோட புறப்பட்டுப் போச்சு. நீ ஜெயில்லேருந்து வந்ததும் உன்னைக் கூட்டிண்டு நாகமங்கலத்துக்கு வரேன்னிருக்கேன்"- என்றார் பிருகதீஸ்வரன். அவருக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் பிரமை பிடித்து நின்ற ராஜாராமனுக்குச் சுயநினைவு வரச் சில விநாடிகள் ஆயின. - . . . . . . . . . . . . . . . .

"rயரோகம்னு சொல்றீங்களே; அதைக் கேட்டுத் தான் ரொம்பக் கவலையாயிருக்கு...'

'அதான் சொன்னேனே ராஜா. உடம்பை உருக்கற பிரியத்தைப் பார்த்திருக்கேன், மனசை உருக்கற பிரியத்தைப் பார்த்திருக்கேன். எலும்பையே உருக்கற பிரியத்தை இப்பத்தான் பார்க்கறேன் நான்... அந்த ஜமீன்தாரிணி,