பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/226

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 ஆத்மாவின் ராகங்கள் இரத்தம் ரத்தமாகக் கோழையைப் பார்த்ததும் எல்.எம்.பி. டாக்டருக்குப் பயம் தோன்றியிருக்க வேண்டும். உடனே மதுரைக்குப் போய்ப் பெரிய டாக்டரைக் கூப்பிட்டுக் கொண்டு வந்து விடச் சொன்னார் அவர். ஜமீன்தாரிணியையும் வைத்தியரையும் மதுரத்தைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அரண்மனைக் காரில் அவன் மதுரைக்கு விரைந்தான். அந்தக் காரில் எவ்வளவு வேகமாகப் போயும் மதுரைக்குப் போக இரவு பதினோரு மணி ஆகிவிட்டது. டாக்டரைத் தூக்கத்திலிருந்துதான் எழுப்ப வேண்டியிருந்தது. ஜமீன் குடும்பத்துக்கு நீண்ட நாளாகப் பழக்கமுள்ள டாக்டராகையால் நிலைமை யைப் புரிந்து தட்டிச் சொல்லாமல் வர உடனே ஒப்புக் கொண்டு புறப்பட்டார். -

'நான் போன வாரம் வந்திருந்தப்ப நிலைமை கொஞ்சம் தேறி நல்லாவே இருந்துதே! மறுபடியும் எப்படி இதுமாதிரி ஆச்சு?' என்று காரில் வரும் போதே டாக்டர் அவனைக் கேட்டார். அவன் நடந்தவற்றைச் சொன்னான்.

'நீங்கள் அவளைப் பாடவிட்டிருக்கக் கூடாது. நானே எப்பவாவது வீணை மட்டும்தான் வாசிக்கலாம்; அது கூட அடிக்கடி கூடாது' என்னு கண்டிச்சுச் சொல்லிருக்கேனே."

டாக்டருக்கு அவனால் ஒரு பதிலும் சொல்ல முடியவில்லை. டாக்டர் கடுமையாகக் கோபித்துக் கொண்டார். அவன் கண்கள் நெகிழ்ந்தன. மனத்தில் என்னென்னவோ நினைவுகள் ஓடின. நல்லதும், பொல்லாததுமாக மாறி மாறித் தோன்றியது. -

'கோழையிலே பிளட் வரது நின்றிருந்தது - நல்ல டெவலப்மென்ட்னு நான் சந்தோஷப்பட்டுண்டிருந்தேன். மறுபடியும் இப்படி ஆச்சுங்கிறீங்க, கடவுள் தான் காப்பத்தணும்..."