பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ஆத்மாவின் ராகங்கள்

'பாடேன்... '

'தெலியலேது ராமா பக்தி மார்க்கமு!"

- அவள் பாடத் தொடங்கியதுமே குறுக்கிட்டுக் கேட்டான் அவன்;

'இதுக்கென்ன அர்த்தம், மதுரம்?"

ராமா! உன்னைப் பக்தி செய்யும் மார்க்கம் தெரியவில்லையே? ' என்று அவன் பக்கமாகக் கையைச் சுட்டிக் காட்டிப் பதில் கூறினாள் அவள். அப்படிப் பதில் சொல்லும் போது அவள் முகத்தில் வெட்கமும் புன்னகையும் போட்டியிட்டன.

அதைக் கேட்டு ராஜாராமனுக்கு மெய்சிலிர்த்தது. இரண்டு அர்த்தத்தில் அவள் அந்த வாக்கியத்தைச் சொல்லியதை அவன் இதயம் உணர்ந்தது. 'காவியம், அலங்காரம் எதுவுமே கற்காமல் தாசிகளுக்கு எப்படி இவ்வளவு நயமாக உரையாட வருகிறது? இவர்கள் சங்கீதத்தை விட நயமாகச் சம்பாவிக்கிறார்கள். நிருத்தி யத்தைவிட லலிதாமாகவும் கோமளமான சுபாவத்தோடும் பழகுகிறார்கள். இந்தக் கவர்ச்சிகள் யாவும் இவர்களுக்குப் பரம்பரையான மூலதனம் போலும்!' - என்றெண்ணி உள்ளுற வியந்தான் அவன். -

'மதுரம் எங்கே அந்த அர்த்தத்தை இன்னொரு தரம் சொல்லு?"

அவள் நாணித் தலைகுனிந்தாள். அதிகாலையில் கண்ட கனவு நினைவு வந்தது அவனுக்கு.

'இன்று காலையில் உன்னுடைய பூக்கள் அர்ச்சிக்கும் பாக்கியம் கால்களுக்குக் கிடைக்கவில்லை மதுரம்?"

"தேவதைகளின் பாதங்கள் அர்ச்சிக்க முடியாத வரை விலகிப் போகும்போது, பக்தி செய்திறவர்களுக்கு