உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.86 ஆனந்தத் தேன் வேகமாக ஓடுகிறது. அதன் பீலியின் கொத்து அசை கிறது. காற்று அடிக்கிறது. அப்போது என்ன நடக்கிறது? மேரு அசைதல் அசைந்தது மேரு. மேருமலை அசைந்தது. பொன்னிற மலை மேரு என் பார்கள். பிரபஞ்சத்துக்கு நடுவில் தூண் போல நிற்பது அது. சூரியனும் சந்திரனும் அதைச் சுற்றி வருகிறார்கள். அந்த மலையின்மீதுதான் தேவர்கள் வாழ்ந்து கொண்டிருக் கிறார்களாம். அதனால் அதற்குச் சுராலயம் என்ற பெயர் உண்டு. பூமியின் நடு அச்சுப்போல் இருக்கிறது அது. அதை யாராவது கண்டது உண்டா என்ற கேள்வி எழ லாம். பூகோளத்தில் பூமத்திய ரேகை என்று ஒன்றைச் சொல்கிறார்கள். 'உலகத்தின் நடுவிலுள்ள கோடு இது. இந்தக் கோட்டின் பக்கத்தில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும்; பாலைவனம் அதிகம்' என்று படிக்கிறோம். இந்தக் கோட்டை யாராவது கண்டதுண்டா? இல்லை. இது மானசீகக் கோடு. ஆனால் இது உண்மை என்றுகொண்டே பல கணக்குகளைப் போடுகிறார்கள். அவை யாவும் உண்மை யல்லவா? உண்மைதான். அந்தக் கோடு கற்பனையில் அமைந்தாலும் எப்படி இருப்பதாகவே கொள்கிறார்களோ அப்படியே மேருவும் இருப்பதாகவே புராணக்காரர்கள் கொள்கிறார்கள். வண்டிச் சக்கரம் கீழே விழாமல் சுற்றி வருகிறது. அவ்வாறு செய்வதற்குக் காரணமாகச் சக்கரத் திற்கு நடுவில் அச்சு இருக்கிறது. அது இரும்பால் அமைந் திருப்பதைப் பார்க்கிறோம். உலகம் சுற்றிக்கொண்டே இருக்கிறது என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள். இது சுற்றிக்கொண்டே இருக்க வேண்டுமானால் நடு அச்சு ஒன்று வேண்டாமா? அந்த அச்சைத்தான் மேரு கிரி என்ற னர் நம் பெரியோர். விஞ்ஞானத்தில் ஒரு பொருளை மிக