உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயிலின் வேகம் 87 நுட்பமாகச் சொல்வார்கள். புராணத்தில் பருப் பொரு ளாகச் சொல்வார்கள். மேரு கிரி பொன்மயமானது என்று சொல்கிறார்கள். அதற்கும் ஒரு பொருள் உண்டு.இரும்பு, வெள்ளி, செம்பு, தங்கம் முதலிய எல்லா உலோகங்களுமே பூமிக்குள் இருந்து தான் கிடைக்கின்றன. எல்லா உலோகங்களிலும் சிறந்தது தங்கம். உலகிற்கே நடு அச்சுப் போல மிக உயர்ந்து இருக் கிற மலையும் பூமியில் இருந்து கிடைக்கும் உலோகங்கள் எல்லாவற்றையும் விட மிக உயர்ந்த தங்கத்தால் ஆனது எனக் கதையாகச் சொன்னார்கள். முருகப் பெருமானது வாகனம் ஆகிய மயில் வேக மாகப் போனபோது அதன் பீலியின் கொத்து அசைந்தத னால் காற்று அடித்தது.அதனால் உலகத்தின் அச்சாக இருக்கிற மேரு கிரியே அசைந்தது. உயர்வு நவிற்சி கவிஞன் எதையேனும் சிறப்பித்துச் சொல்லப் புகுந் தால் சில சமயங்களில் அதை அழகுபட மிகைப்படுத்திச் சொல்வது வழக்கம். நம் நண்பர் ஒருவரை ஒரு வாரமாகப் பார்க்கவில்லை. அவர் திடீரென்று வருகிறார்.நாம், "அடே யப்பா, உன்னைப் பார்த்து ஒரு யுகம் ஆயிற்றே!" என் கிறோம். பலபல லட்சம் ஆண்டுகளைக்கொண்ட ஒரு யுகமா ஆயிற்று? ஆறேழு நாட்களாகத்தான் அவரைப் பார்க்க வில்லை. இருந்தாலும்யுகமென்று சொல்கிறோம்.ஒரு வாரம் பார்க்காததனால் பல காலமாகப் பார்க்காதது போன்ற உணர்ச்சி தோன்றியது. அதை அப்படியே சொல்லாமல் யுகம் ஆயிற்றே என்கிறோம். கதை எழுத்தாளர்களும் இம்முறையை ஆளுகிறார்கள். மிக உயர்ந்த வீடு என்று சொல்வதற்கு, வானத்தை முட்டும் வீடு என்கிறார்கள். நாம் ஒவ்வொன்றையும் அளப்பதற்கு ஒவ்வோர் அளவு கருவி வைத்திருக்கிறோம். அடி, முழம் என்று