மயிலின் வேகம் 9.1 விடும். இன்பம் வேறு, துன்பம் வேறு என்று அறியாமல் ஆனந்தமயமாகி இருக்கும் நிலை அல்லது சமநிலை வந்து விடும்; இன்பத்தினாலும், துன்பத்தினாலும் மன வேறு பாடு அடையாத நிலை அது. சமநிலை பெற்றோர் தந்தையாகிய இரணியனுடைய மடி மீது உட்கார்ந்த போதும் பிரகலாதன் இன்பம் அடையவில்லை; மலையின் மீதிருந்து உருட்டிவிட்டபோதும் துன்பம் அடையவில்லை. இன்ப துன்பமாகிய மேடு பள்ளம் இல்லாமல் அவன் உள் ளம் சமநிலையில் இருந்ததே அதற்குக் காரணம். அப்பர் சுவாமிகள் சமண மதத்தில் ஆசிரியராக இருந் தார். அவர் மீண்டும் சைவ சமயத்திற்கு வந்துவிட்டார். 'சமண மதத்தின் தலைவராக இருந்த ஒருவர் சைவ மதத் தில் சேர்ந்ததால் நமக்கு அவமானம் வந்துவிட்டதே!" என மற்றவர்கள் அரசனிடம் போய்ச் சொல்ல, அரசன் நாவுக்கரசரைப் பல்வகையாலும் துன்புறுத்த நினைத்தான். யானையை விட்டு இடறச் செய்தான். சுண்ணாம்புக் காள வாய்க்குள் தூக்கிப் போடச் சொன்னான். ஆண்டவன் திரு நாமத்தைச் சொல்வதன் மூலம் இன்ப துன்பத்தை வென்று மனம் சம நிலைப்பட்ட பெருமான் அவர்; ஆதலாலே அவர் அந்தத் தண்டனைகளால் சிறிதும் இடர்ப்படவில்லை. உள் ளத்திலும்,உடம்பிலும் துன்பம் உண்டாகவில்லை. ளத்தில் இருந்த மலைகள் பொடியாகி, கடல்கள் தூர்ந்து போய்ச் சமநிலை அடையப் பெற்றவர் அவர். உள் ரமண மகரிஷி நம்மைப் போன்ற உடம்பு படைத் தவர்தாம். ஒரு சமயம் பெரிய கதண்டுக் கூட்டத்தில் காலை வைத்தபோது அவை கடித்து விட்டன. அதனால் ஏற்பட்ட வலியை உடம்பு அனுபவித்தது. "படு, படு என்று சொன்னாரேயன்றி அந்தத் துன்பத்தினால் மன
பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/105
Appearance