உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 ஆனந்தத் தேன் மாறுபாடு எதுவும் அவருக்கு உண்டாக வில்லை. அவர் மனம் சமநிலை பெற்றுவிட்டது. சாத்தியமா? து நமக்குச் சாத்தியம் ஆகுமா என்றால், சாத்தியம் ஆகும் என்றே சொல்ல வேண்டும். இப்போதும் நாம் சில விதமான துன்பங்களைச் சகித்துக் கொள்கிறோம்; மன் வேறுபாடு அடையாமல் இருக்கிறோம். ஓர் உதாரணம் பார்க்கலாம். நாம் சுவாரசியமாகச் சீட்டு ஆடிக் கொண் டிருக்கிறோம். அப்போது முதுகில் ஒரு கொசுக் கடிக் கிறது. அது நமக்குத் தெரிகிறது. ஆனால் கையை எடுத் துக் கொசுவை அடிப்பது இல்லை. அது கடிப்பதனால் உண் டான உடல் உணர்ச்சி இருந்தும், சீட்டாட்டத்தில் உள்ள சுவாரசியத்தினால், அதைத் தாங்கிக் கொள்கிறோம்.தாங் குகிற ஆற்றல் இருப்பதால் சாட்சியாக இருக்கிறோம். அநுபவம் இருக்கும்; அதனால் மனவேறுபாடு இராது. அதுதான் சாட்சி மாத்திரமாய் நிற்கும் நிலை. கொசுக் கடித்தாலும் கை அதை அடிக்கிறது இல்லை. கொசுக் கடி தெரியாதவர்போல இருக்கிறோம்; மனத்தில் குழப்பம் ஏற் படாமல் இருக்கிறோம். சீட்டாட்டத்தில் வேகம் இருப்பத அனால் கொசுக் கடியைச் சாட்சியாயிருந்து பார்க்கிறோம். திருப்பதிக்குப் பிரார்த்தனை என்று சொல்லிச் சிலபேர் சாலையில் புரண்டு கொண்டு வருகிறார்கள். அப்படிப் புர ளுகிறவன் உடம்பும் நமது உடம்பைப் போன்றது தான்; அவன் தாய் அவனைப் பத்து மாதம் சுமந்தே பெற்றிருக் கிறாள். அவன் தன் உடம்புக்குக் கவசம் ஒன்றும் போட்டுக் கொள்ளவில்லை. நூற்றுமூன்று டிகிரி வெப்ப முள்ள வெயில் அடிக்கும்போது அவன் கோவிந்தா', 'கோவிந்தா' என்று வீதியில் புரண்டு வருகிறான். அவன் உடம்புக்குச் சூடு தெரியவில்லையா? தெரி