மயிலின் வேகம் 93 கிறது. இருந்தாலும் அந்தச் சூட்டை அவன் தாங்கிக் கொள்கிறான். அந்த அளவில் அவன் மனம் சாட்சி மாத்திரமாக இருக்கிறது. அவனுக்குக் காசு மேலே குறி; பற்று; அது தான் காரணம். பணத்தின் மேலே அவன் எண்ணம் இருப்பதால் சூட்டை அனுபவிக் கிறான்; மனத்திலே மாறுபாடு இல்லாமல் சாட்சிமாதிரி இருந்து அனுபவிக்கிறான். கர்ணன் பரசுராமரிடம் தான் பிராமணன் எனச் சொல்லி வித்தைகளைக் கற்றுக் கொண்டிருந்தான். ஒரு நாள் ஆசிரியர் படுத்துக் கொள்ள வேண்டுமென்று நினைத் தார். தலையணை இல்லை. தம் மாணாக்கன் மடி மீது தலையை வைத்துக் கொண்டு படுத்தார். தம்மை மறந்து சுகமாகத் தூங்கினார். அப்போது ஒரு வண்டு கர்ணன் துடையைத் தொளைக்க ஆரம்பித்தது. அசைந்தால் குருநாதர் எழுந்து விடுவாரே என்று கர்ணன் பேசாமல் இருந்தான். ரத்தம் குபுகுபு எனப் பீரிட்டு வந்தது. இருந்தும் அவன் அசையவில்லை. காரணம் மனத்திலுள்ள வீரம். வண்டு துளைக்கும் வலியாகிய அநுபவம் இருந்தது. ஆயி னும் மனமாறுபாடு இல்லை; குழப்பமும் மனம் சாட்சிமாத்திரமாக இருந்தது. ல்லை. வ.வே.சு.ஐயர் சிறந்த தேச பக்தர். அவர் இங்கிலாந் தில் இருந்தபோது விநாயக தாமோதரசாவர்க்கர் முதலியவர் களும் அவரும் சேர்ந்து இந்தியா வீகு என்ற சங்கத்தை. நடத்தினார்கள். இந்தியா சுதந்தரம் பெறப் பாடுபடுவதே அந்தச் சங்கத்தின் நோக்கம். அவர்கள் எந்தத் துன்பம் வந்தாலும் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கும் அல்லவா? தமக்கு அத்தகைய தைரியம் இருக்கிறதா என்பதைச் சோதிக்க ஒரு காரியம் செய்தார்கள். கட்டை விரலை ஒரு மேஜையின்மேல் வைத்து ஓர் ஊசியினால் அதன் மேல் குத்தி ஊடுருவி ஊசியின் முனை மேஜை வரையில் போய்-
பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/107
Appearance