94 ஆனந்தத் தேன் மேஜையைக் குத்துகிற வரைக்கும் பொறுத்துக்கொள்ள வேண்டும். வ.வே.சு.ஐயர் அப்படிக் குத்துவதைப் பொறுத்துக்கொண்டார்.ஊசி குத்தினால் வலி இருக்காதா? இருக்கும். அதைப் பொறுக்கும் வீரம் வேண்டும் என்ப தற்காகவே அவ்வாறு செய்தார்கள். வலியிருந்தும் சாட்சி மாத்திரமாயிருந்து பொறுத்துக்கொண்டார்கள். சாமான்யச் சீட்டு ஆட்டத்திற்காகக் கொசுக் கடியைச் சாட்சிமாத்திரமாய் இருந்து அநுபவிக்கலாம் என்றால், பிக்சைக் காசுக்காக மண்டை பிளந்து போகும் வெயிலைச் சாட்சிமாத்திரமாய் இருந்து சகிக்கலாம் என்றால், இந்திய விடுதலைக்காக ஊசியினால் விரலில் குத்திக்கொள்ளும் போது வலியைச் சாட்சிமாத்திரமாய்ப் பொறுத்துக் கொள்ளலாம் என்றால், இறைவனை எண்ணி, அவன் திருவருளைப் பெற்றவர்கள் உலகத்தில் ஏற்படும் இன்ப துன்பங்களை எல்லாம் சாட்சிமாத்திரமாய் இருந்து நுகர முடியாதா? மனத்திலே சமநிலை ஏற்பட்டால் அது சாத்திய மாகும். சீட்டு ஆடுகிறவர்களும் பிறரும் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் மனத்தில் ஓரளவு சமநிலையைப் பெறு கிறார்கள். அருள் பெற்றவர்களோ எப்போதுமே சமநிலை யுடன் இருக்கிறார்கள். மயில் வாகனன் சமநிலை அருளுதல் அத்தகைய சமநிலையை முருகன் திருவருளால் பெற லாம். முருகப் பெருமான் மயில் வாகனனாக வரவேண்டும். வந்தால் மேடு பள்ளம் தூர்ந்து போய் எல்லாம் சமமாகி விடும். முருகப் பெருமானைத் தியானம் செய்தால்,மயில் மேல் ஏறிவரும் கோலத்தில் உள்ளத்தே நடமாடவிட் டால், நித்தியம் போர்க்களமாக இருக்கிற நம் உள்ளம், அசுர சம்பத்தால் பள்ளம் விழுந்தும், தேவ சம்பத் தால் மேடிட்டும் இருக்கிற உள்ளம், சமனாகிவிடும். இன்ப
பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/108
Appearance