சேவற் பதாகை 99 சொல்லும்போது, அவர் வீட்டுக் கணக்கர் கார் வைத் திருக்கிறார்" என்று சொன்னால், அவர் பெருமை பின்னும் அதிகமானது என்று புலனாகும். கணக்கரின் பெருமையை நேர் முகமாகச் சொல்வதுதான் இது; ஆயினும் மறைமுக மாக அவருடைய எசமானது பெருமையையும் அது புலப் படுத்துகிறது. விறகு சுமந்த சொக்கன் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புர ணத்தில் ஒரு கதை. மதுரை நகரில் பாணபத்திரன் என்ற இசைப் புலவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அரசாங் கத்தில் உத்தியோகம். அவன் சிவபக்தன். மதுரையில் சோமசுந்தரக் கடவுள் சந்நிதானத்தில் இசை இசைத்துத் தொண்டு செய்வதிலேயே நாட்டம் உடையவனாக இருந் தான். ஒரு நாள் வடநாட்டிலிருந்து ஏமநாதன் என்ற வீணை வித்துவான் ஒருவன் மதுரைக்கு வந்தான். அரசனி டம் தன் பெருமையைச் சொல்லிக் கொண்டதோடு, தன்னை யாழ் வாசிப்பதில் தோல்வியுறச் செய்பவர் யார் இந்த நாட் டில் இருக்கிறார் எனவும் செருக்கோடு கூறினான். அரசன் தன் ஆஸ்தானத்தில் உள்ள பாணபத்திரனுக்கு அவனோடு வாசிக்க வேண்டுமென்று கட்டளையிட்டான். பாணபத் திரனுக்கு இந்த இசைவாதத்தில் ஈடுபட விருப்பம் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் சோமசுந்தரக் கடவு ளின் சந்நிதானத்திற்குச் சென்று, 'இறைவனே, நாதனை நான் யாழ்வாசிப்பதில் தோல்வியுறச் செய்ய முடியு மென்று தோன்றவில்லையே! அவனை வெல்ல வேண்டு மென்ற ஆசை எனக்கு இல்லை. அவனிடம் நான் தோற் றுப் போய்விட்டேன் என்றால் அரசன் என்னை வேலையை. விட்டுத் தள்ளிவிடுவானே! ஊரை விட்டுப் போக வேண்டி நேர்ந்தாலும் நேருமே! அப்புறம் உன் சந்நிதானத்திற்கு நான் எப்படி வரமுடியும்? உனக்குத் திருத்தொண்டு ஏம்
பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/113
Appearance