உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 ஆனந்தத் தேன் பாத்திரத்தில் ஒரு ரூபாய் கூடப் போடவில்லை.எப்படி இருந்தாலும் கடைசியில் இரு பாத்திரமும் காலியாகத் தான் இருக்கும். அதுபோல, உலகிலுள்ள குழந்தைகள் எதையுமே அறிந்து கொள்ளாத உள்ளம் உடையன; அருணகிரிநாதக் குழந்தை நன்றாக வளர்ந்து தன் அறிவி னால் அறிந்து கொண்டவை அனைத்தையும் மறந்துவிட்ட உள்ளம் உடையது. குழந்தைகளின் உள்ளம் மாசு ஏறாத உள்ளம்; முன்பு மாசு ஏறியிருந்தாலும் அவற்றை எல்லாம் துடைத்துவிட்ட உள்ளம் அருணகிரிநாதக் குழந்தை யுடைய உள்ளம். எப்படியாயினும் இரண்டும் ஒரே வித மாகவே இருக்கும். நாம் பார்க்கிற இயற்கைக் குழந்தைகள் தம் தாய் தந்தையர்களையே மிகப் பெரியவர்களாக நினைப்பார்கள். யாரை நினைத்தாலும் தம் தாய் தந்தையர்களின் அளவைக் கொண்டு நினைக்கின்ற தன்மை உடையது அவர்களின் உள்ளம். அருணகிரிநாதக் குழந்தை என்ன செய்கிறது? அதுவும் ஒரு தந்தையினிடத்தில் அன்பு வைக்கிறது. உயிருக் குத் தந்தையாகிய முருகனை நினைத்து,தன் இன்ப துன்பம், உயர்வு தாழ்வு ஆகிய எல்லாவற்றையும் அந்த இறைவனைச் சார்த்தியே நினைக்கிறது. கந்தர் அலங்காரம் பாடுகிற இந்த அருணகிரிநாதக் குழந்தை தன் மனம் என்னும் கற் பனைக் குதிரையைத் தட்டிவிட்டு, அதன் வேகத்தில் தன் தந்தையாகிய இறைவனை நினைத்துப் பாடுகிறது. பெருமானிடத்தில் உள்ள பொருள்களை வருணிக்கிறது. புகழ் விரிக்கும் மரபு . அப் ஒருவருடைய சிறப்பைப் புலப்படுத்த வேண்டு மானால் நேரே அவர் பெருமையைத்தான் சொல்ல வேண் டும் என்பது இல்லை. அவரைச் சார்ந்தவர்களுடைய பெரு மையைச் சொல்வதும் மறைமுகமாக அவருடைய பெருமை யைப் புலப்படுத்துவதே யாகும். ஒரு பணக்காரர் புகழைச்