சேவற் பதாகை 97 குழந்தை பிறந்து அறிவு தோன்ற ஆரம்பித்தவுடன் அதற்கு முழு உருவமாக முதலில் தோற்றுபவள் தாய்தான். பிறகு தகப்பனாரை அறிகிறது. தாய் தந்தையை அறிந்த குழந்தை அவர்களைக் கருவியாகக் கொண்டே உலகிலுள்ள வற்றை அளக்கும். ஒரு போலீஸ்காரன் தன் குழந்தைக்கு, "ஓர் ஊரில் ஒரு ராஜா இருந்தான்” என்று கதை சொல்ல ஆரம்பித்தால், அந்த ராஜா தன் அப்பாவைப் போலவே தொப்பி போட்டிருப்பான், சொக்காய் அணிந்திருப்பான் என்று நினைக்கும். அதற்குத் தாய் தகப்பனையன்றி உல கமே இல்லை. அருணகிரிநாதக் குழந்தை றைவன் சந்நிதானத்தில் அருணகிரியார் குழந்தை யாகிவிட்டார். தன்னுடையது என்பது எதுவும் இல்லாமல், தன் செயல் அற்று, எல்லாவற்றையும் தாயின் கையில் ஒப்படைத்துவிட்டு இன்ப துன்பம் எல்லாவற்றையும் தாய் வழியே பெறுவது குழந்தை. அம்மா வீதிப் பக்கம் சென்றால் குழந்தையும் தாயுடனே ஓடுகிறது; உள்ளே வந்தால் உள்ளே வருகிறது: படுத்துக்கொண்டால் படுத்துக்கொள்கிறது. இத்தகைய குழந்தையாக அருணகிரியார் ஆகிவிட்டார். அவருக்கு உலகம் எங்கும் வேறு ஒன்றும் தெரியவில்லை. அவர் நினைவு,கற்பனை எல்லாம் இறைவனைப்பற்றியும் அவனோடு தொடர்புடைய பொருள்களைப் பற்றியுமே எழுகின்றன. உலகிலுள்ள மற்றக் குழந்தைகளுக்கும், அருணகிரி நாதக் குழந்தைக்கும் ஒரு வேறு பாடு. அந்தக் குழந்தைகள் உலகத்தை இன்னும் அறிந்துகொள்ளவில்லை. இந்தக் குழந்தையோ அறிந்து கொண்டதை மறந்துவிட்டது. நான்கு ரூபாயை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்தது ஒரு குழந்தை; திரும்பவும் அந்த நான்கு ரூபாயை எடுத்துச் செலவழித்துவிட்டது. மற்றொரு குழந்தை 7
பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/111
Appearance