. ஆனந்தத் தேன் 19. புலப்படும். நமக்குத் தோன்றவில்லையே எனின்,நாம் அறியாமையாகிய இருட்டுக்குள் கிடக்கின்றோம். சூரிய னுடைய ஒளியினால் எப்படிப் புற இருள் நீங்கிப் போகின் றதோ, அதே போல இறைவனுடைய திருவருள் கூட்ட உண்டாகும் ஒளியினால் அறியாமை இருள் விலகிப் போகும். பந்தபாசங்கள் எல்லாம் போய்விடும். அதற்கும் அப்பால் ஞான மலையின் மீது கொஞ்சம் கொஞ்சமாக ஏறி னால் தத்துவங்கள் விரிந்துகொண்டே போகும். அந்தத் தத்துவங்களை இப்போது நம் கண்களினால் காண முடி யாது. இறைவன் திருவருளினால் பெறப்படும் அறிவுக் கண்களுக்குத்தான் அவை புலப்படும். அருள் ஒளி பழங்காலத்தில் ஒரு பாண்டியன் இருந்தான். வரகுண பாண்டியன் என்பது அவன் பெயர். சிவபிரானிடத்திலே அவன் மிகுந்த பக்தி உடையவன். இறைவன் அருளால் அகக்கண் பெற்றவன். ஒரு வேப்ப மரம், பழுத்துக் குலுங்கியிருந்தது. பிறர் கண்களுக்கு வெறும் வேப்பம் பழங்களாகத் தோன்றின பொருள் அவன் கண்களுக்குச் சிவலிங்கங்களாகத் தோன்றினவாம். உடனே அந்த மரத் திற்கு அவன் விதானம் அமைக்கச் செய்துவிட்டான். அது மாத்திரமா? நல்ல மழைக் காலம் வந்தது. மழைத் தண் ணீர் தேங்கி நின்ற குட்டையில் தவளைகள் இருந்தன. இரவுக் காலங்களில் அவை ஒன்றாகச் சேர்ந்து சங்கீதம் ஆரம்பித்துவிட்டன. அவற்றின் குரல் அவ னுக்கு எப்படிக் கேட்டது? பக்தர்கள் எல்லோரும் சேர்ந்து "ஹர ஹர என்று சொல்வது மாதிரியாக அவனுக்குத் தோன்றியதாம்.ஹர நாமத்தைச் சொல் லும் இந்த கல்ல. பிராணிகளுக்கு உணவை : வீசுங் கள் என்று அவன் சொன்னான்.இறைவனுடைய நினைவு அவன் உள்ளத்திலே பதிவு பெற்றுவிட்டதால் பாட
பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/33
Appearance