உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ஆனந்தத் தேன் காணும் பொருள்களிடத்தெல்லாம் னுடைய தொடர்பைக் நமக்குத் தோன்றவில்லையே என்றால் நமக்கு எப்படித் தோன்றும்? கறுப்புக் கண்ணாடி போட்டுக்கொண்டிருக்கிற வனுக்கு உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களும் காக்கை யைப் போலக் கறுப்பாகத்தான் தோன்றும். காமாலைக் கண்ணனுக்குக் கண்டனவெல்லாம் மஞ்சளாகத்தானே தெரியும்? இறைவனது அருளாகிய வெளிச்சம் நமது உள்ளத்தில் அடித்தால்தான் உலகத்திலுள்ள பொருள் களின் உண்மை தெரியும். அவன் இறைவ கண்டான். அந்த மாதிரியாக டம் இருட்டிலே ஊரிலுள்ள திக்குத் திசை தெரியவில்லை. சூரியன் வந்த பிறகு அந்த ஊரில் அவன் இருக்கிற தெரிந்தது. மிகப் பெரிய மலை தெரிந்தது. அதைப் போல அஞ்ஞானமாகிய இருட்டிலே அகப்பட்டு நாம் எல்லோரும் இந்த உலகத்தில் ஒன்றும் தெரியாமல் தவிக்கிறோம்.நம் முடைய வீடு என்று எதனையோ எண்ணிக்கொண்டிருக் கிறோம். அருளாகிய ஒளி வந்தால்தான், "நாம் யார்? நமக்கும் இவ்வுலகிலுள்ள பொருள்களுக்கும் என்ன சம்பந்தம்?. இவ்வுலகிலுள்ள பொருள்களின் உண்மை இயல்பு என்ன? நமது உண்மையான வீடு எங்கே இருக் கிறது?" என்பவை தெரிகின்றன. உலகத்தைத் தெரிந்து கொண்டால் போதுமா? போதாது. உலகம், உயிர், கடவுள். என்ற மூன்று பொருள்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். உலகத்துப் பொருள்களைத் தெரிந்துகொண்ட வுடனே, தான் எங்கே இருக்கவேண்டியவன் என்று தெரிந்துகொண்டு, அந்த நிலையை எய்துவது எப்படி எனத் தெரிந்துகொள்கிறான். முன்பு நாம் எப்படி அருவருக்கத் தக்க நிலையில் இருந்தோம் என்பதையும் காண்கிறான். தான் இருக்கிற நிலையிலிருந்து மேலே அண்ணாந்து பார்க் கிறான்; அதாவது, உன்னத திருஷ்டி உடையவனாகிறான். பெரிய மலைக்குப் பக்கத்தில் தான் இருப்பதைப் பார்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்தத்_தேன்_1956.pdf/34&oldid=1725240" இலிருந்து மீள்விக்கப்பட்டது