ஆனந்தத் தேன் 21 கிறான். உலக இயலுக்கு அப்பாற்பட்ட இறைவனுடைய உண்மையைப் பார்க்கிறான். இவற்றையெல்லாம் பார்க்க அவனுக்கு இறைவனுடைய திருவருள் வேண்டும்; அவன் அருளொளி கிடைக்கவேண்டும். அஞ்ஞானமாகிற இருட் டில் அவன் இவற்றை எல்லாம் பார்க்க முடியாது. எத்தனை தலங்களுக்குப் போனாலும் பயன் இல்லை. எத்தனை முறை ஆகமங்களைப் புரட்டிப் பார்த்தாலும் உண்மை விளங் காது. மாணிக்கவாசகர் சொல்கிறார்: களின் 'இத்தந் திரத்திற் காண்டுமென் றிருப்போர்க்கு அந்தந் திரத்தின் அவ்வயின் ஒளித்தும்". இருட்டிலே ஒருவன் உட்கார்ந்துகொண்டு புத்தகங் ஏடுகளைப் புரட்டிக்கொண்டே இருக்கிறான். அதில் ஒன்றுமே தெரியவில்லை என்று சொல்கிறான். எப்படித் தெரியும்? விளக்கைப் போட்டால் புத்தகங்களி லுள்ள எழுத்துத் தெரியும். அப்படித்தான் ஆகமங்களைப் படித்துப் படித்துப் பார்த்துவிட்டுப் பொருள் புரியவில்லை என்கிறான்; இவன் அறியாமை இருட்டில் இருந்துகொண்டு அதன் ஏடுகளைப் புரட்டுகிறான்.ஆனால் ஆண்டவன் அருள் ஒளி கிடைத்த மாத்திரத்திலே அதில் எத்தனை எத். தளையோ பொருள் புலப்படுகின்றன. ஞான மலை . அருணகிரியார் இன்ப அனுபவத்தை எப்படிப் பெற்றார்? அவருக்கு முதலில் இறைவன் அருளால் ஒளி தோன்றியது; ஒளி தோன்றிய மாத்திரத்தில் நிலம் தெரிந்தது. நிலம் மாத்திரம் தெரிந்ததோடு நிற்கவில்லை. ஒரு பெரிய மலை விளைந்தது. ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத்து. ஒளியில் விளைந்தது வெறும் சாதாரண மலையா? அது ஞான பூதரம். பூதரம் -மலை. அது பெரிய ஞான மலை. வெறும்
பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/35
Appearance