உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ir இப்படியே கண்ணனைப்பற்றியும் சொல்லலாம். பாகவதக் கதைகளை வைத்துப் பார்த்தால் கண்ணன் ஆயிரமாயிரம் வேறு பட்ட கோலங்கொண்டு விளங்குவது தெரியும். சிவபெருமானைப்பற்றிய எண்ணங்களின் விரிவு கரை காண முடியாதது. தமிழ் நாட்டில் அவை மிகமிக அதிகம். மகா புரா ணங்களில் காணப்பெறும் மூர்த்தங்கள் பல. அந்த அந்தத் தலங் களில் இறைவன் இயற்றிய திருவிளையாடல்களோடு தொடர் புடைய கோலங்கள் அளவிறந்தன. மதுரைத் திருவிளையாடல் அறு பத்துநான்கு. அவற்றோடு தொடர்புடைய கோலங்கள் அறுபத்து நான்குக்கும் மேற்பட்டவை.திருவாரூர்த் தியாகராச வீலை முந்நூற்றறுபது. ஒவ்வொரு லீலைக்கும் ஒரு கோலத்தை வைத் துக்கொண்டாலும் முந்நூற்றறுபது திருக்கோலங்களை நினைக் கலாம். . முருகனுக்கும் புராணங்கள் கூறும் கோலங்கள் பல. தியான சுலோகங்களில் காட்டும் உருவங்கள் பல. அருணகிரியார் உள் ளக்கிழியில் உருவெழுதிக் கண்டவை கணக்குக்கு அடங்காதவை. அவருடைய உலகமே தனியானது. அது விரிந்து விரிந்து செல் கிறது. இப்போது கிடைக்கும் 1300 திருப்புகழைப் பார்த்தாலே அருணகிரியாரின் அன்பு விரிவையும் உள்ள விரிவையும் உணர்ந்து பிரமிக்கிறோம். அவர் இயற்றிய பதினாயிரம் திருப்புகழ்ப் பாடல் களும் கிடைத்திருந்தால்? தெய்வங்களின் திருவிளையாடற் சிறப்பையும் திருக்கோல அழகையும் தமிழர் உணர்ந்து நுகரும் அளவுக்கு மற்றவர்கள் நுகர இயலாதென்றே தோன்றுகிறது. கல்லிலும் சொல்லிலும் தெய்வங்கள் உருக் கொண்டிருப்பதைக் கொண்டே இதைத் தெரிந்துகொள்ளலாம். தமிழில் முருகனைப்பற்றிய செய்திகள் பழங்கால முதற் கொண்டே வழங்கி வருகின்றன. சங்க நூல்களில் திருமுருகாற் றுப்படையும் பரிபாடலும் அவனைப் பாராட்டுகின்றன. அவ னுடைய திருக்கோயில்களைப்பற்றிச் சொல்கின்றன. அவனை மக்கள் வெவ்வேறு வகையில் வழிபடுவதையும் காட்டுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்தத்_தேன்_1956.pdf/6&oldid=1725212" இலிருந்து மீள்விக்கப்பட்டது