உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V பின்பும் பல பெரியோர்கள் முருகனைப் பாடினார்கள். ஆனால் அருணகிரிநாதரைப்போல விரிவாகப் பாடினவர்கள் வேறு யாரும் இல்லை. அவருடைய கற்பனையும் சந்த அமைப்பும் வியக்கத் தக்கவை. அவர் இயற்றிய நூல்கள் எல்லாவற்றிலுமே சில பொதுப் பண்புகளைக் காணலாம். விரிந்த பாட்டாக உள்ள திருப்புகழிலும் கட்டளைக் கலித்துறையாக அமைந்த கந்தர் அலங்காரத்திலும் கலி விருத்தத்தாலாகிய கந்தர் அநுபூதியிலும் அருணகிரிநாதர் பாணி இருக்கும். முருகனுடைய திருவுருவ வருணனையை ஓரிடத்தில் அமைப் பார். அவன் திருநாமங்களைப் பிறிதோரிடத்தில் அடுக்குவார். அவன் குழவிப் பருவ விளையாடல்களைச் சொல்வார். வீரச செயல்களை விரித்துரைப்பார். வள்ளியம்மைபால் காதல் பூண்ட கருணையைப் பாராட்டுவார். இவை கந்தவேளின் திருவினை யாடல்கள். தமக்கு அவனருளால் கிடைத்த இன்பத்தைச் சில இடங்களில் எடுத்துச் சொல்லி உருகுவார். தகுதியில்லாத தம்மையும் ஆண்டுகொண்ட கருணையை எண்ணி வியப்பார். அவன் திருவருளால் தமக்குக் கிடைத்த அநுபவத்தைச் சொல்ல முடியாமல் திணறுவார். தாம் தவறு செய்வது போலவும் குற்றம் மிக உடையவர் போலவும் கூறி இரங்குவார். தமக்கு அருள் செய்ய வேண்டு மென்று பணிந்து வேண்டுவார். உலகில் மக்கள் இறைவன் அருளைப் பெறாமல் வீணாகப் பிறந் திறந்து அல்லற்படுவதை எண்ணி வாடுவார். இறைவனைப் பணி யுங்கள். பாடுன்கள் என்று பணிப்பார்.அறம் செய்யுங்கள் என்று அறிவுரை கூறுவார். 'பாவச் செயல்களைச் செய்து வீணாகிறீர் களே; இவ்வாறு நடவுங்கள்' என்று வழி காட்டுவார். உயர்ந்த ஞானநெறியைச் சொல்வார். சரியை, கிரியை யோகங்களையும் சொல்வார். முருகனைப் பாராட்டுவதோடு அவனிடம் உள்ள பொருள் களையும் போற்றுவார். அவற்றின் இயல்பை விரித்துரைப்பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்தத்_தேன்_1956.pdf/7&oldid=1725213" இலிருந்து மீள்விக்கப்பட்டது