உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi இத்தகைய முறைகளைக் கந்தர் அலங்காரத்திலும் காணலாம். கந்தர் அவன்காரத்தில் ஒரு கருத்தை அழகுபடச் சொல்வதற் குப் பலபல முறைகளை ஆளுகிறார் அருணகிரியார். அவர் அருட் புலவர். அருள்நுபவமும் புலமையும் ஒருங்கே வாய்த்தவர். அரு ளநுபவத்தை உணர்ச்சி வசப்பட்டு, "நான் எவ்வாறு சொல் வேன்!" என்று வியப்புக்குறி போடும்போது காணலாம். புல் மையை அவர் கருத்தை அமைக்கும் முறையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். உருவகம், உவமை, உயர்வு நவிற்சி முதலிய அலன் காரங்கள் கந்தர் அலங்காரத்தில் அழகாக அமைந்துள்ளன. கந்த புரரணத்தில் முருகனுடைய திருவவதாரம் முதல், வள்ளி யம்மை திருமணம் வரையில் பல வரலாறுகள் வருகின்றன. அதிற் கண்ட வரலாறுகளோடன்றி முருகனைப்பற்றிய வாலாறு கள் வெவ்வேறுகப் பழங்கால முதல் வழங்கி வருகின்றன. இராமா யணம், பாரதம், வடமொழிக் கந்த புராணம், குமார சம்பவம் என்னும் வட நூல்களில் முருகனைப்பற்றிய வரலாறுகள் வருகின் அவை யாவும் ஒரே மாதிரி அமைந்தவை என்று சொல்ல இயலாது. பல வேறுபாடுகள் இருக்கும். ஒன்றில் காணப்பெறாத் புதிய செய்திகள் வேறு ஒன்றில் இருக்கும். அப்படியே திருமுரு காற்றுப்படை பரிபாடல் முதலிய பழந்தமிழ் நூல்களிலும் கந்த புராணத்தில் இல்லாத கதைகள் இருக்கும். * 7507 அருணகிரிநாதர் வாக்கிலும் பல புதிய வரலாறுகளைக் காண லாம். முருகனையும் அவனைச் சார்ந்துள்ள பொருள்களையும் பற் றிய தத்துவங்களை அவர் பல இடங்களில் விளக்குகிறார். அவனு டைய ஆறுமுகக் கோலம் அநாதியானது என்றும் அவன் மயில் ஓங்கார உருவமுடையதென்றும் அவனைச் சிவபெருமான் வணங் கினார் என்றும் வள்ளியெம்பெருமாட்டியை வணங்கிப் பாதம் வருடினர் என்றும் அவர் கூறும் செய்திகள் புராணத்தில் காண்ப் படுவதில்லை. ஆனாலும் முருகன் அருளில் ஊறிய அவர் கூறுவன் ஏற்றுக்கொள்வதற்கு உரியனவே. அப்படியெல்லாம் நடந்தனவா என்று கேட்பதற்கு நாம் யார்? "இல்லை, இல்லை; அப்படி நடக்க 15.

  • 'பெரும் பெயர் முருகன்' என்னும் புத்தகத்தில்

கட்டுரையில் இந்த வேறுபாடுகளைப்பற்றி ஆராய்ந்திருக்றேன். என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்தத்_தேன்_1956.pdf/8&oldid=1725214" இலிருந்து மீள்விக்கப்பட்டது