உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சும்மா இருக்கும் எல்லை 67 பேச்சு வந்தாலும் இன்பமாக இருந்தது; கொல்லிப்பண் ணைப் போல இருந்தது. குயில் அழுகிறது; சிரிக்கிறது; சண்டை போடுகிறது. அது நமக்குத் தெரியாது. அதன் வாயிலிருந்து எது வந்தாலும் அது நமக்குப் பாட்டுத்தான். வீணை வாசித்தால் மிக இனிமையாக இருக்கிறது. தூக்கத் தில் பக்கத்தில் இருக்கிற வீணையின்மேல் கையைத் தூக் கிப் போடும்போது 'டங்' என ஒலி வந்தாலும் அது காதுக்கு இனிமையாகத்தான் இருக்கும். அப்படி வள்ளியின் வாயி லிருந்து எந்தச் சொல் வந்தாலும் கொல்லிப் பண்ணைப் போல இருந்ததாம். முதலில் வள்ளிநாயகி அவனோடு பேசாமல் மௌனம் சாதித்தாள். அவளுக்குக் கோபத்தை உண்டு பண்ணி அவளைப் பேச வைத்தான் முருகன். பேசிக்கொண்டிருந்த அருணகிரியாரைச் சும்மா இருக்கும் எல்லையுள் செல்ல விட்டவன் யாரோ, அவனே சும்மா இருந்த வள்ளியம்மை யைப் பேச வைத்தான். 3 பேச்சும் மோனமும் பல பல மோன நிலை திடீரென்று வந்துவிடாது. பொருள்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் வழக் கத்தை மாற்றி இறைவனைப் பற்றி மிகுதியாகப் பேசிப் வழக வேண்டும். 'பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாள்எல்லாம் பிறவா நாளே' என்று அப்பர் சொன்னார்.வாய் படைத்த பயன் இறை வனை வாழ்த்துவது. மற்ற மற்றக் காரியங்கள் எல்லாம் மெல்ல மெல்ல ஓடுங்க, இறைவனைப் பற்றியே சதா சிந்தித் துக்கொண்டு, அவன் புகழைப் பற்றியே பேசி வர வேண்டும். வாய் படைத்தும், அவனைப் பற்றிப் பேசாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்தத்_தேன்_1956.pdf/81&oldid=1725287" இலிருந்து மீள்விக்கப்பட்டது