68 ஆனந்தத் தேன் இருப்பது என்ன மௌனம்? பலவீன மெளனம், மற்ற வற்றைப் பற்றிச் சண்டப் பிரசண்டமாகப் பேசிவிட்டு இதில் மட்டும் மௌனம் சாதிப்பது நல்லதன்று. இறைவன் நாமத்தைச் சொல்லவிடாமல் தடுப்பது நாணம்; மௌன சாதனை யன்று. தன்னைச் சுற்றி உள்ளவர்களை நினைத்துக் கொண்டிருக்கும்போது நாணம் இருக்கும். சொல்வதன் பொருளை நினைத்தால் நாணம் விலகும். நாணம் இருந்தால் இன்பம் இல்லை. இறைவனது திருநாமத்தைச் சொல் வதற்கு நாணினால் இன்ப அனுபவம் கிடைக்காது. நாணத்தை விட்டுவிட்டு இறைவன் நாமத்தை நாம் சொல்ல வேண்டும். "கூட்டத்திலே கோவிந்தா போடு வது என்பார்கள். நாலு பேர்களுக்கு மத்தியில் நாமும் சேர்ந்து கூட்டத்தோடு கூட்டமாக இறைவன் நாமத்தைக் கூறினால் நமது அபஸ்வரம் புலப்படாது. பல பேர்க ளுடைய குரலுக்குள் அது கலந்து போய்விடும். இப்படியே சொல்லிச் சொல்லிப் பழகினால் கடைசியில் தனியாக இருந்து அவன் நாமத்தைக் கூறிக் கதற முடியும். அவன் நாமத்தை உள்ளத்தோடு கலந்து, உணர்ச்சி ததும்பச் சொல்ல வேண்டும். அப்படி வாயார அவன் புகழைப் பாடிப் பாடிப் பழகினால் மௌன நிலை தானே சித்திக்கும். தர்மபத்தினியுடன் இல்லறம் நடத்தி வரு கின்றவனைச் சந்நியாசிக்குச் சமானமானவன் என்று சொல்வார்கள். அதுபோல், இறைவன் பேச்சைத் தவிரப் பிற இழிவான், அவலமான பேச்சுக்களைப் பேசாமல் இருப் பது மெளனத்திற்குச் சமானம். இந்த நிலையை அடுத்து உள்ளத்திற்குள்ளேயே இறைவன் நாமத்தைச் சொல்லும் மௌன நிலை வரும். அப்பால் சொல்லுகைக்கு இல்லை என்று சும்மா இருக்கும் நிலை வரும். பேசப் பேச இனிக்கிற பொருள் ஆண்டவன். ஆண்ட வனைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால், அந்தப் பேச்சு
பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/82
Appearance