சும்மா இருக்கும் எல்லை 69 முடிந்த எல்லையிலே மோனம் தலைப்படும். மௌனம் அநு பவத்துக்கு அறிகுறி. ஒரு பெண் பேசிக்கொண்டே இருக்கிறாள். வாசலில் கணவன் வருகின்ற காலடி ஓசை கேட்டமாத்திரத்தில் வாய் அடங்கிவிடும். இதைப் போலவே இன்ப அநுபவம் தலைப்படும்போது தவநெறியில் மோனம் தலைப்படும். அது வரைக்கும் இறைவனைப் பற்றியே பேசிக்கொண்டுதான் இருக்க வேண்டும். மோனமும் அநுபவமும் ஒரு தலைவியைப் பிரிந்து அவள் நாயகன் ஊருக்குப் போகிறான். வர மூன்று நாள் ஆகும் எனச் சொல்லிப் போகிறான். அவன் பிரிவினால் அவளுக்குத் துன்பம் உண் டாகிறது. போகும்போது, "உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். தவறாமல் கடிதம் போடுங்கள்" என்று சொல்லி அனுப்புகிறாள். அவளுக்குத் துணையாக அடுத்த வீட்டுப் பெண் அவள் வீட்டிலேயே தங்கி இருக்கிறாள். தலைவன் ஊருக்குப் போனது முதல் தலைவி தன் தலைவனு டைய குணங்களைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாள். இரண்டு நாளாயின்; கடிதம் ஒன்றும் இல்லை. மூன்றாம் நாளும் கடிதம் இல்லை.ஒரு நிமிஷம் அவளுக்கு ஒரு. யுக மாகப் போய்க்கொண்டிருக்கிறது. தலைவன் சொல்லியபடி ஊரிலிருந்து வரவில்லை. தலைவிக்குப் பெருங் கோபம் வந்து விட்டது. "இவர் எப்போதும் இப்படித்தான். சொன் னால் சொன்னபடி நடப்பதில்லை. கடிதம் கூடப் போடுவ நில்லை.வரட்டும் சொல்கிறேன்; என்ன பண்ணுகிறேன் பார்" என்று பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் சொல்கிறாள். ஊரிலிருந்து தலைவன் வந்தவுடன் ஒரு பெரிய சண்டை. நடக்கப் போகிறது என்று அந்தத் தோழி நினைக்கிறாள். அவன் மறுநாள் வந்துவிட்டான். அவன் வரும் பொழுதே அந்தக் காதலியின் முகத்தில் புன்முறுவல் .
பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/83
Appearance