உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயிலின் வேகம் 75 யாகக் கட்டித் தோளில் தூக்கிச் சென்றான். சிவகிரிதான் பழனி என்ற திருப்பெயருடன் இன்றும் நின்று நிலவு கிறது. அவன் இரு மலைகளையும் தோளில் கட்டி எடுத்துச் சென்றதனால்தான் முருகனுக்குக் காவடி எடுக்கும் சம்பிர தாயம் வந்தது. காவடி எடுக்கின்ற வழியைக் காட்டிக் கொடுத்த ஆசிரியன் இடும்பன். அவன், "வேலும் மயிலும்" என்று சதா சொல்லிக் கொண்டே இருக்கிறவனாம். "வேலும் மயிலும் துணை' என்று சிலர் எழுதுவது பழக்கம். துணை என்று போட வேண்டியது கூட இல்லை. வேலும் மயிலும்" என்பதே ஒரு மகாமந்திரமாக இருக் கிறது. இது இன்று நேற்று வந்த வழக்கம் அல்ல. மிகப் பண்டைக் காலம் முதற்கொண்டு வழங்கிவருகிறது. இலக் கியம் அதற்குச் சான்று. பரிபாடலில் சங்கநூல்களில் பரிபாடல் என்பது ஒன்று அதில் திருப்பரங்குன்றத்தைப்பற்றி ஒரு பெரும் புலவர்பாடுகிறார். எம்பெருமானுடைய திருவருளினால் நல்ல கணவனைப் பெற்ற காதலி ஒருத்தி இல்லறம் நடத்துகிறாள். அவ ளுக்கு ஒரு சமயம் தன் நாயகன் மேல் சந்தேகம் வந்தது. திருப்பரங்குன்றம் சென்று பரத்தை ஒருத்தியோடு அளவ ளாவி வருவதாக அவள் தன் கணவனை ஐயுற்று அதனால் ஊடல் கொள்கிறாள். தலைவன் இதை உணர்ந்து கொள்கி றான். தன்னை அப்படிச் சந்தேகிக்கக் காரணம் இல்லை என்று வற்புறுத்தி ஆணை இடுகிறான். ஆணை இடும்போது தெய்வத்தின் பெயரைக் கூறி ஆணை இடுவார்கள்; தெய்வத் திற்குச் சமானமான பெரியவர்களின் பெயரைச் சொல்லி ஆணை இடுவார்கள்: அல்லது தம் பெயரிலேயே ஆணை இடுவார்கள். தான் பரத்தையர்பால் செல்ல வில்லை. என்பதற்கு இந்தக் கணவன் தன் நாயகியிடம், 'வேல் மேல் ஆணை; மயில் மேல் ஆணை" என்று சொல்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்தத்_தேன்_1956.pdf/89&oldid=1725295" இலிருந்து மீள்விக்கப்பட்டது