உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ஆனந்தத் தேன் காதலிக்குப் பக்கத்தில் இருந்து ஆறுதல் அளித்து வரு கின்ற தோழி அதைக் கேட்கிறாள். தன்னுடைய தலைவி யின் நாயகன் திருப்பரங்குன்றம் போய்ப் பரத்தையருடன் இருந்து வருகிறான் என்றே அவளும் நினைக்கிறாள். 'அக் குற்றத்தைச் செய்ததோடன்றி, அப்படிச் செய்யவில்லை என்று வேலையும் மயிலையும் நினைத்து ஆணை இடுகிறானே! இது பெரும் பாவம் அல்லவா? இந்தப் பொய்யாணையினால் இவனுக்கு இன்னும் என்ன என்ன தீங்கு ஏற்படுமோ? என அஞ்சுகிறாள். "நீ எதை வேண்டுமானாலும் நினைந்து சூளுரை சொல். வேலையும் மயிலையும் சொல்லிச் சூளுறா தே" என்கிறாள். முருகனுக்கு அருகில் இருப்பவை அவை. ஆதலின் அவற்றுக்கு அஞ்ச வேண்டும். பழங்காலம் முதற் கொண்டே வேலையும், மயிலையும் புகழ்கின்ற வழக்கம் உண்டு என்பதை இது காட்டுகிறது. 2 பிரணவ உருவம் எம்பெருமானுக்குரிய வாகனமாகிய மயில் பல வகை யில் சிறப்புடையது. ஆடும் மயில், வட்ட வடிவமாகத் தன் தோகையை விரித்துக் கொண்டு, ஒரு காலைச் சற்றுத் தூக்கிய வண்ணம் இருக்கும். அப்போது அதன் முழு உரு வத்தையும் கூர்ந்து பார்த்தால் ஓங்காரம்போலத் தோன்றும். பிரணவ சொருபியாக இருப்பவன் முருகப் பெருமான். அதன் பொருளாகவும் இருக்கிறான். அதன் பொருளைத் தந் தைக்கு உபதேசம் செய்த குருநாதனாகவும் இருக்கிறான். ஒளியும் ஒலியும் கலந்த அதனூடே ஒளிர்கிறான். ஒலி ஒளி இரண்டும் கலந்தது பிரணவம். "ஓங்காரத்து உள்ஒளிக்கு உள்ளே முருகன் உருவம் கண்டு தூங்கார்.' என அருணகிரியார் பின்பு ஒரு பாட்டில் சொல்கிறார்.ஓங் கார சொரூபியாகிய முருகன் ஒங்கார உருவமான மயிலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்தத்_தேன்_1956.pdf/90&oldid=1725296" இலிருந்து மீள்விக்கப்பட்டது