மயிலின் வேலும் 77 மீது எழுந்தருளி இருக்கிறான்.இந்தத் தத்துவத்தை ஆடும் பரியாகிய மயில் காட்டுகிறது. முருகன் ஞானசொரூபி. அவன் ஏறி இருக்கிற வாகனமாகிய மயில் பிரணவ சொரூபம். மந் "ஆன தனிமந்த்ர ரூப நிலைகொண்ட தாடுமயில் என்ப தறியேனே!" என்பது திருப்புகழ். எல்லா மந்திரங்களுக்கும் மேலான ந்திரமாக, ஒப்பற்ற மந்திரமாக, தனி மந்திரமாக இருப்பது பிரணவம். அதன் உருவத்தைப் பெற்றது. தோகை விரித்து ஆடும் மயில். பாசப் பாம்பு நம் மனத்தில் பாசம் என்ற கட்டு இருக்கிறது. பாசம் பாம்பைப் போன்றது. அந்தப் பாம்பைப் போக்க வேண்டுமென்றால் பாம்புக்குப் பகையான ஒன்று வேண் டும்; நமக்குப் பயம் கொடுக்காமல், பார்ப்பதற்கு எழிலாக பாம்புக்கு அச்சத்தைத் தரக் கூடிய ஒன்று வேண்டும். அதுதான் மயில். மயில் பார்ப்பதற்கு அழகாக இருக் கிறது. தோகை விரித்து ஆடுகையில் மிக மிக அழகாக இருக்கிறது. ஆனால் அது பாம்புக்குப் பகை. எம்பெரு மான் அமர்ந்திருக்கின்ற மயிலின் திருவுருவத்தைப் பாருங் கள். அதன் காலில் ஒரு பாம்பு இருக்கும். வளைந்து கொண்டு இருக்கிற பாம்பை மயில் கொத்திக் கொத்தி அடக்குகிறது. பாசம் என்ற பாம்பை அடியோடு ஒழிக்கக் கூடிய பிரணவ தத்துவமாக மயில் விளங்குகிறது. மட்டும் அன்று. வாசி யோகம் அது. நமது உடம்பில் ஆறு ஆதாரங்கள் உண்டு. மூலா தாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகிய அந்த ஆறில் முதலாவது. மூலாதாரம். முதுகந்தண்டினூடே ஓடுகிற நடு நரம்புக்கு
பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/91
Appearance