அதிர்ஷ்ட கவசம் 7 பின்னர் அந்த மூதேவியின் முகத்திலேயே விழிப்பதில்லை என்று ராமு தீர்மானித்துவிட்டான். கடைசியாக ராமு தலையிட்ட முயற்சியில் நான்கூட ஏமாந்து 200 ரூபாய் தொலைத்துவிட்டேன். மேல்நாடுகளில் நடப்பது போல் முதல்தரமான தமிழ் வாரப் பத்திரிகை ஒன்று தொடங்குவதற்கு அவன் ஏற்பாடு செய்தான். இது நல்ல யோசனை என்பதை உங்களில் யாராவது மறுப்பீர் களா? மாட்டவே மாட்டீர்கள்! ஆனால் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியாது: ராமுவுக்கும் அப்போது அந்த விஷயம் தெரிந்திருக்கவில்லை. அது என்னவென்றால், தமிழ் நாட் டில் மாதந்தோறும் 300 தமிழ் வாரப் பத்திரிகைகள் ஆரம் பிக்கப்பட்டு அத்தனையும் மாண்டு வருகின்றன என்பதே. தமிழ் நாட்டில் வாரப் பத்திரிகை ஒன்று நன்றாக நடை பெறவேண்டுமாறக் அதற்கு மூன்றே மூன்று வழிதான் உண்டு. ஒன்று, பத்திரிகாசிரியர் பிரபல அரசியல் கட்சித் தலைவராய் இருக்கவேண்டும்; அல்லது வசைமொழி பாடு வதில் அளவில்லாத ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். அல்லது, பத்திரிகையைச் சந்தா இல்லாமல் இனமாக வழங்க வேண்டும். இந்த மூன்று வகை யோக்கியதைகளும் என் நண் பனுக்கு இல்லை. ஆகவே, அவன் பத்திரிகையை எவ்வளவோ திறமையாக நடத்தியும் ஆறாவது மாதத்தில் அது செத் தொழிந்தது! அதை மேற்படி இழவுச் செய்தியை என்னிடம் சொல்லி விட்டுத்தான் பாவம், துரதிருஷ்ட ராமு ஒரு கப் காப்பிக் கென்று ஒன்றே காலணா வாங்கிக்கொண்டு போனான். கேட்டா அவன் வழக்கம்போல் 'கடன்' என்று யினும் அவனிடம் திரும்பி வாங்கிக்கொள்ளும் எண்ணமே எனக்கு இல்லை. அப்படிப் போனவன் சொந்த மோட்டார் வண்டியில் வந்து கடற்கரையில் காற்று வாங்கியதைக் கண்டபோது — ஏன்? நீங்கள் யாரேனுமாயிருந்தால் ஆச்சரி யத்தினால் மூர்ச்சையடைந்து இறந்து போயிருப்பீர்கள். இருக்கட்டும், நான் ஆரம்பித்த கதையை எந்த இடத்தில் விட்டேனென்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதல்லவா?
பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/12
Appearance