ஆனந்த ஓவியம் ஆமாம். அதிர்ஷ்டம் எந்த வழியாக வந்தது? புதையல் ஏதேனும் அகப்பட்டதா?" என்று ராமுவைக் கேட்டேன். "புதையலுமில்லை; ஒன்றுமில்லை. நான் சொன்னால் நம்ப மாட்டாய்?" என்றான் ராமு. உடனே அவன் தன் உட்சட்டையின் பொத்தான்களை அவிழ்த்தான். கழுத்தில் ஒரு மெல்லிய கறுப்புக் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டிருந்த எண்கோண வடிவமான ஒரு வெள்ளித் தகட்டைக் காட்டினான். அதிலே ஏதோ எழுத் துக்கள் கிறுக்கப்பட்டிருந்தன. .. இது என்ன?" இதுதான் மகாசக்தி அதிர்ஷ்ட கவசம்." "சரி, அப்புறம்?" "இந்தக் கவசத்தின் அதிர்ஷ்டம் வந்தது." மூலமாகத்தான் எனக்கு நான் கொல்லென்று சிரித்தேன். "கதை விடாதே!" என்றேன். "பார்த்தாயா? நீ நம்பமாட்டாய் என்று நான் சொன்னேனல்லவா? ஆயினும் உண்மை அதுதான்." "இதோ பார். ராமு! என்னைப் பைத்தியக்காரன் என்று எண்ணாதே! இந்தக் காலத்தில் இந்த மாதிரி உடான்ஸை யார்தான் நம்புவார்கள்? உண்மையைச் சொல்.' "சத்தியமாகச் சொல்கிறேன். இந்தக் கவசந்தான் எனக்கு அதிர்ஷ்டம் கொண்டு வந்தது. "நல்லது நீ அதை நிரூபித்துவிட்டாயானால் நான் என் வக்கீல் தொழிலை விட்டுவிட்டு, உச்சிக் குடுமி வைத்துக் கொண்டு கையில் ஜபமாலையுடன் உட்கார்ந்து விடுகிறேன்." ஜாக்கிரதை. அப்புறம் வாக்குத் தவறக் கூடாது.' நீ என்னதான் சொல்கிறாய்? இந்த அதிர்ஷ்ட கவசம் அணிந்த பிறகு உன் ஆகாய விமானத்தை அரசாங்கத்தார் வாங்கிக்கொண்டார்களா? அல்லது, தர்க்காஸ்து எடுத்த நிலத்தில் தண்ணீர் கிடைத்துவிட்டதா? அல்லது அறு வடை இயந்திரம் 申
பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/13
Appearance