உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 அந்தச் ஆனந்த ஓவியம்: ஒரு சமயத்தில் உணவாராய்ச்சியைப்பற்றிய புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன்; அதில் உடல் நலத்துக்கு விட்டமின் களின் அவசியத்தைப்பற்றியும், புதிய கறி காய்களில் 'விட்டமின்கள் ஏராளமென்றும், ஆகையால் மனிதர்கள் புதிய காய்கறிகள் அதிகம் உட் கொள்ள வேண்டுமென்றும் எழுதியிருந்தது. வீட்டுக்குப் பக்கத்திலுள்ள வெற்றிடத்தில் ஏன் காய் கறிகள் பயிர் செய்யக்கூடாது என்பதாகப் பளிச்சென்று ஓர் எண்ணம் உதயமாயிற்று. பணத்துக்குப் பணம் மீதி, புத்தம் புதிய காய்கள் உடனுக்குடன் பறித்துக்கொள்ளலாம். இப்படி எண்ணி உடனே ஓர் ஆளைக் கூப்பிட்டுச் சுமார் பத்தடி சதுரத்திற்கு நன்கு கொத்தி வாங்கச் செய்தேன். முதன் முதல் கத்திரிச் செடி வைத்துப் பார்க்கிறதென்று தீர்மானம். கத்திரிச் செடிக்கு ஆட்டின் எருவைப் போட்டால் செழித்து வளரும் என்று சொன்னார்கள். இரண்டணாவுக்கு ஒரு கூடைய பூட்டெரு வாங்கி வந்து கொட்டச் செய்தேன். பிறகு இரண்டணாவுக்கு 20 கத்திரிச் செடிகள் வாங்கி வந்து நடச் செய்தேன். ஆளுக்குக் கூலி நாலணாகொடுத்தேன். அன்றிரவு மிகக் குதூகலத்துடன் அந்தச் செடிகளில் காய்க்கப் போகும் கத்திரிக்காய்களைப்பற்றி நானும் என் மனைவியும் பேசிக் கொண்டிருந்தோம். அவை காய்க்க ஆரம்பித்துவிட்டால் கறிகாய் விலைக்கு வாங்க வேண்டிய அவசியமே யிராது என் றேன் நான். "என்னதான் காய்த்தாலும் தினம் கத்திரிக் காயே சாப்பிட முடியுமா?" என்றாள் மனைவி. அப்படி மீந்துவிட்டால் கொத்துவால் சாவடி வியாபாரி யாருக் கேனும் கான்டிராக்ட் விட்டுவிடலாமென்று நான் கூறி னேன். செடி பெரிதாகி ஒவ்வொரு செடியிலும் பத்துப் பதினைந்து கத்திரிக் காய்கள் பெரிது பெரிதாகத் தொங்கு வதாகவும், அவைகளைக் கூட்டு செய்வதா, கறி பண்ணுவதா என்பதைப்பற்றி நானும் என் மனைவியும் சண்டை போட்டதாகவும் அன்றிரவு கனவு கண்டேன். . மறுநாள் காலையில் எழுந்ததும் முதல் காரியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/21&oldid=1721405" இலிருந்து மீள்விக்கப்பட்டது