உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விவசாயச் சிறப்பு! 17 கத்திரிக் கொல்லை பார்வைதான். ஆனால் செடிகளைப் பார்த் ததும் உற்சாகம் பெரிதும் குறைந்து போயிற்று. எல்லாம் சேர்ந்து துவண்டு கிடந்தன. கூலி ஆள் செடிகளைச் சரியாக நட்டானோ இல்லையோ, வேர் ஊன்றியதோ இல்லையோ வென்று சந்தேகம் உண்டாயிற்று. ஒரு செடியைப் பிடுங்கிப் பார்த்து இந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளப் போனேன். அதற்குள் குழந்தை ராஜம் ஓடிவந்து,"ஐயோ மாமா! ஏன் செடியைப் பிடுங்குகிறீர்கள்?" என்றாள். நான் விஷயம் தெரிவித்தபோது, 'முதலில் அப்படித்தான் வாடியிருக்கும். நாளைக்கெல்லாம் சரியாய்ப் போய்விடும். அதற்காக நட்ட செடியைப் பிடுங்கிப் பார்ப்பார்களா? என்றாள். இந்த விஷயங்களெல்லாம் எந்த விவசாயக் கலாசாலையில் படித்து இவனுக்குத் தெரிந்தது என்று எனக்கு ஆச்சரியமாய்ப் போய்விட்டது. பதினைந்து நாட்கள் ஆயின. கத்திரிச் செடிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தன. இலைகள் தளதளவென்றிருந்தன. எனக்கும் என் மனைவிக்கும் குழந்தைகள் ராஜம், ராமு எல் லாருக்கும் காலையில் எழுந்ததும் முதல் வேலை கத்திரிச் செடி களைப் பார்வையிடுவதுதான். கைகால் அலம்புவது, வாய் கொப்புளிப்பது எல்லாம் கத்திரிப் பாத்தியில்தான்! ஒரு சொட்டுத் தண்ணீர்கூட வீணாக்குவதில்லை. இன்னும் நாலைந்து நாளில் பூக்கத் தொடங்கிவிடலாமென்று எதிர் பார்த்தோம். இப்படியிருக்கையில் ஒரு நாள் திடீரென்று ராஜம், 'ஐயோ! மாமா! கத்திரிச் செடி போச்சு! என்று கத்தினாள். நான் திடுக்கிட்டு, எழுதிக்கொண்டிருந்தவன் அப்படியே பேனாவைப் போட்டுவிட்டு, எழுந்து ஓடினேன். பார்த்ததும் வயிறு பகீர் என்றது. ஒரு பெரிய காளை மாடு கத்திரிப் பாத்தியில் புகுந்து நாவை நீட்டி நீட்டி ருசி பார்த் தது. அதன் இலைகளைக் காம்புகளுடன் உள்ளே தள்ளிக் கொண்டிருந்தது. எனக்குண்டான கோபத்தையும் எரிச்சலை யும் சொல்லி முடியாது: "இதென்ன அநியாயம்? கத்திரிச் ஆ. ஓ . i-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/22&oldid=1721406" இலிருந்து மீள்விக்கப்பட்டது