உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எந்த ஊர், ஸார்? "ஓகோ அப்படியா? முண்டோ? இல்லை." 感藥 அ தே தன் அல்லது . அப்படி? 25 இப்போது மனைவி கர்ப்ப கர்ப்பமேயாகவில்லையா? 'கர்ப்பம் தரித்து அபார்ஷன் ஆகிவிட்டது " சூச்சூச்சு! நீங்கள் தம்பதிகளாக ஒரு தடவை இராமே சுவரம் போய் வரவேண்டும். இருக்கட்டும், தங்களுக்கு என்ன உத்தியோகம்?" [நேயர்களே! மன்னியுங்கள். இந்தக் கேள்விகளின் வரிசைக் கிரமம் சில சமயம் மாறி வரலாம்.உதாரணமாக, என்ன உத்தியோகம்?' என்னும் கேள்வியை மூன்றாவது பாணமாகவே போட்டுவிடுவார்கள்.இவ்வளவு நேரம் தாமதிக்கமாட்டார்கள்.] "யூனியன் பாங்கியில் குமாஸ்தா." அநேகர் "சம்பளம் என்னவோ? கேள்விகளுக்குள் ஜீவாதாரமான கேள்வி இதுவே யாகும். இதற்கு நீங்கள் சொல்லும் பதிலைக்கொண்டுதான் உங்கள் அந்தஸ்தை அவர் மதிப்பிடப் போகிறார்.'தாங்கள் அல்லது 'நீர்' அல்லது 'நீ' என்று இனிமேல் அவர் உங்களைக் குறிப்பிடப் போவது இந்தப் பதிலைப் பொறுத்தே யாகும். எனவே, உங்கள் மனச்சாட்சியின் ஆற்றலுக்கு ஏற்ப நீங்களும் பத்தோ, இருபதோ, முப்பதோ, ஐம் பதோ, நூறோ சம்பளம் கூட்டிச் சொல்கிறீர்கள். உள்ளது உள்ளபடியே சொல்லும் பைத்தியக்காரர்களும் சிலர் இருக் கலாம்: இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், அடுத்தாற்போல் fமேல் வரும்படி உண்டோ?" என்ற கேள்வி வரும்போது என்ன பதில் சொல்வீர்கள்? இந்த நெருக்கடியான நிலைமையில் எப்படிப்பட்ட யோக்கிய னாயினும் சிறிது திக்கு முக்காடிப் போக வேண்டியதுதான்.

அல்லது 'உத்தியோகமில்லை, விவசாயம்' என்று கூறு கிறீரென வைத்துக்கொள்வோம். அப்போது வேறொரு கேள்வி வரிசை கிளம்பும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/30&oldid=1721414" இலிருந்து மீள்விக்கப்பட்டது