26 ஆனந்த ஓவியம் "எவ்வளவு காணி நிலம் சேரும்?” "முப்பது காணி." ஓகோ! பரவாயில்லை. எல்லாம் நன்செயா? புன்செய் உண்டா? "நன்செய் 20 காணி; புன்செய் 10 காணி. "பேஷ்! கணக்குச் சரிதான். பெறுமானம் என்ன இருக்குமோ?'" "நன்செய் காணி 2000 ரூபாய் பெறும்." 'நல்ல சொத்துத்தான். 40 ரூபாய்க்குக் குறைவில்லை. கடன் உண்டோ?" "பத்தாயிரம் ரூபாய் கடன் இருக்கிறது?" “அடடா! புரோநோட்டா, பந்தகமா?" "பந்ததந்தான்.' ஆமாமாம்; இந்தக் காலத்தில் அண்டிமாண்டுக்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? வட்டி என்னவோ?” 00 ஒரு வட்டி." "பாதகமில்லை; அதை விடாதேயுங்கள். குறைந்த வட்டிக்கு நாணயம் கிடைக்காது.' இவ்வளவு "இந்தச் சொத்துக்குச் சொந்த வீடு அவசியம் இருக்க வேண்டுமே?" .. 'ஆமாம்; இருக்கிறது." "மச்சு வீடா? ஓட்டு வில்லை வீடா?"" “ஓட்டு வில்லைதான். 99 “கை ஓடா? கள்ளிக்கோட்டை ஓடா?"
- கள்ளிக் கோட்டை ஓடு!”
- அது தான் சரி; கீழே தள வரிசை உண்டோ?"
.. ஆமாம், உண்டு.' "செமன்டா? சுண்ணாம்புக்களாயா?" - இதற்குமேல் இந்தக் கேள்வி பதிலை வளர்த்தினேனாயின், நேயர்கள் தடியை எடுத்துக்கொண்டு என்னை அடிக்க வருவார்களென்ப தில் சந்தேகமில்லை. ஆனால், நான் அவர்கள் கையில் சிக்க மாட்டேனாதலால், அடுத்தாற்போல் இந்த மாதிரி கேள்வி கேட்பவர்கள் எதிர்ப்படும்போது தங்கள் கோபத்தை அவர்