எந்த ஊர், ஸார்? 27 கள்மீது செலுத்துவார்கள். இம்மாதிரி அஹிம்சா தர்மத். துக்கு மாறுபாடு உண்டாவதை நான் விரும்பவில்லையாதலின் இத்துடன் விடுகிறேன். நிற்க. சம்பளம் என்ன?' என்னும் கேள்வி சம்பந்தமாகப் பல முறை நான் சங்கடத்தில் மாட்டிக்கொண் டிருக்கிறேன். அவற்றில் இரண்டு அநுபவங்களை உங்களுக்குக் கூறியே ஆக வேண்டும். 1921 ஆம் வருஷத்தில் நான் கலாசாலையை பகிஷ்கரித்துவிட்டு, காங்கிரஸ் பிரசாரம் செய்துகொண் டிருந்தேன். அப்போது ஒரு நாள் நான் ரெயில் பிரயாணம் செய்ய நேரிட்டது. ரெயிலில் எதிர்ப் பீடத்தில் உட்கார்ந் திருந்த கிராமவாசி ஒருவர் வழக்கமான விசாரணைக்குப் பின்னர், "என்ன உத்தியோகம்?" என்றார். "காங்கிரஸ் வேலை என்றேன். காங்கிரஸா? அப்படி ஒரு கம்பெனி இருக்கிறதா? என்ன சம்பளம்?" என்று கேட்டார். 'சம்பளம் கிடையாது" என்றேன். அது என்ன ஐயா, சம்பளம் இல்லாத உத்தியோகம்? ஓஹோ! கமிஷன் உண்டோ?" "கமிஷனும் இல்லை" என்றேன். "என்னடா அப்பா, அதிசயமாயிருக்கிறது? சம்பளம் கமிஷன் ஒன்றுமில்லாமல் எதற்காக உத்தியோகம் பார்க் கிறது?" இல்லை,ஐயா! காங்கிரஸ் என்றால் தேச நன்மைக் காகப் பாடுபடும் ஒரு சபை. அந்தச் சபையின்கீழ்ப் பொ சம்பளமில்லாமல் ஊர் ர் ஊராய்ச் ஜன நன்மைக்காகச் சென்று பிரசாரம் செய்கிறோம்!" அந்த மனிதர் கொல்லென்று ஒரு சிரிப்புச் சிரித்தார். அவநம்பிக்கை ததும்பிய அந்தச் சிரிப்பின் முன்னால், நான் எவ்வளவோ விவரமாக எடுத்துச் சொன்னதெல்லாம். வியர்த்தமாயிற்று. ஆனால், அந்தக் காலம் இப்போது மாறி விட்டதென்றே நம்புகிறேன். உப்புச் சத்தியாக்கிரஹத்
பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/32
Appearance