எந்த ஊர், ஸார்? "இருக்கட்டும். ஐயா! செட்டியார் செத்துப் போனார். சொன்னீர்?- என்றா 'அப்படி நான் சொன்னேனா? அட இழவே! அப்படியானால் அவர் சாகவில்லையா?" அதில் அபிப்பிராய பேதம் இருந்தது. சிலர் செத்துப் போனதாகச் சொன்னார்கள்; சிலர் சாகவில்லை யென் றார்கள்.' "நீர் என்ன நினைத்தீர்? 'நான் ஒன்றும் நினைக்கவில்லை. நான் ஏன் நினைக்க வேண்டும்? எனக்கா கருமாதி!" வேறு மனிதனாயிருந்தால் இதற்குள் தோல்வியை ஒப்புக்கொண் டிருப்பான். ஆனால் அந்த மூக்கு நீள மனிதர் இலேசுப்பட்டவரல்ல; எனவே, கொஞ்ச நேரங் கழித்து மறுபடியும், "தங்களுக்கு அண்ணன் தம்பிகள் யாரேனும் உண்டா?" என்று கேட்டார். "உண்டு என்றுதான் நினைக்கிறேன். ஆனால் நிச்சய மாய்ச் சொல்வதற்கில்லை. உண்மை என்னவென்றால் நன்றாக ஞாபகமில்லை" என்றேன். இதைப்போன்ற யில்லை" என்றார் மூக்கர். அதிசயத்தை நான் கேட்டதே ஓஹோ ! எந்த விதத்தில் இது அதிசயமாகத் தோன்று கிறது?" என்றேன். 'சற்று முன்னால் உங்களுக்கு ஒரு தம்பி உண்டென்றும், அவன் மகாமகத்துக்குப் போயிருந்ததாகவும் சொன்னீர் களே!* ஆமாம், ஸார்! ஆமாம். நல்ல வேளை ஞாபகப்படுத் தினீர்கள். மிக்க வந்தனம். ஒரு தம்பி இருந்தான். அவன் பெயர் இன்னாச்சிமுத்து. அந்தப் பெயரைச் சொன்னாலே எனக்குத் துக்கம் நெஞ்சை அடைத்துக்கொண்டு போகும். அதனால்தான் மறந்துவிட்டேன்.* "ஐயோ பாவம்! செத்துப் போனானாக்கும்!" ஆ. ஓ. i-3
பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/38
Appearance