34 .. ஆனந்த ஓவியம் அதுதானே ஸார், நிச்சயம் தெரியவில்லை! ஏன் கேட் கிறீர்கள்? பெரிய மர்மமாக அல்லவா நேர்ந்து போயிற்று?" "மர்மம் என்ன? ஆளே அகப்படவில்லையோ? "அப்படித்தான் சொல்லவேண்டும். புதைத்துவிட்டு வந்தோம். அப்புறம். சுடுகாட்டில் இதென்ன கூத்து? செத்துப் போனது நிச்சயம் தெரி யாமலே புதைத்துவிட்டீர்களா?"" சீச்சீ! அப்படியல்ல. செத்துப் போனது சர்வ நிச்ச யம். உம்மைப்போல் இப்படி யாராவது கேட்கப் போகிறார்க ளென்றெண்ணித்தான் டாக்டர் சர்டிபிகேட்டை வாங்கி வைத்திருக்கிறோம்." செத்துப் போனது நிச்சயம். புதைத்தது நிச்சயம். பின்னர் இதில் மர்மம் என்ன?" . நன் 'ஆ! அதுதான் விஷயம்: செத்துப் போனதும் புதைத்ததும் நிச்சயந்தான். ஆனால், யார் செத்துப் போனது, யாரைப் புதைத்தது என்பதுதான் மர்மம். றாகக் கவனித்துக் கேளுங்கள். நானும் இன்னாச்சிமுத்துவும் இரட்டைப் பிள்ளைகள். நாங்கள் மூன்று வயதுக் குழந்தை களாயிருந்தபோது சேர்ந்தாற்போல் குளத்தில் விழுந்து விட்டோம். இரண்டு குழந்தையில் ஒன்று செத்துப் போயிற்று. செத்துப் போனது யார் என்று நிச்சயமாக இதுவரை கண்டு பிடிக்கவில்லை. சிலர் இன்னாச்சி என்றார் கள்; சிலர் நான் என்கிறார்கள். 'தங்கள் பெயர் என்ன? பார்த்தீரா? நீர் புத்திசாலி யென்றல்லவா நினைத் தேன்? செத்துப் போனது இன்னாரென்று தெரியாதபோது என் பெயர் இதுவென்று நான் எப்படிச் சொல்வது. இருந் தாலும் இந்த மர்மத்தைக் கண்டுபிடிக்க ஒரு துப்பு எனக்கு அகப்பட்டது. இதுவரை ஒரு பிராணியிடமும் அதை நான் வெளியிட்டதில்லை உம்மிடந்தான் முதன் முதலாகச் சொல்கிறேன்: இரட்டைக் குழந்தைகளில் ஒன்றின் இடது தோளில் பெரிய மச்சம் ஒன்றிருந்தது. அந்தக் குழந்தை தான் முழுகி இறந்து போயிற்று."
பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/39
Appearance