ஓம் ஸ்ரீசாயி ராம் அமரர் கல்கி பாலரவி நிறுவனத்தின் அதிபர் உயர்திரு. வேங்கடராமன் அவர்கள் (இவரை நாங்கள் செல்லமாகப் பெரியவர் என்று அழைப்பது வழக்கம்) 'ஆனந்த ஓவியம் - I என்ற தலைப்பில் அமரர் கல்கியின் சில ஹாஸ்ய எழுத்தோவியங் கள் அடங்கிய தொகுப்பு ஒன்றைப் புத்தக உருவில் வெளி யிடப் போவதாகக் கூறிவிட்டு, அமரர் கல்கியின்பால் ஈடு இணையற்ற பக்தியும் அன்பும் எனக்குள்ள காரணத்தால், இவரைப்பற்றிச் சில வரிகள் எழுதுங்களேன்' எனவும் தெரிவித்தார். ஆம்; அமரர் 'கல்கி'யைப்பற்றிய ரஸமான விவரங்களை நேரில் அனுபவித்ததை -அடிக்கடி அலுவலக நேரங் களிலேயே எனக்குச் சொல்லுவார் பெரியவர். நேரம் போவதே தெரியாது. அமரர் கல்கியிடம் எனக்குள்ள பக்தியும் பேரன்பும் அளவுகடந்தவையாகும். ஆனால், இவரைப்பற்றிச் சில வரிகள் எழுத எனக்குள்ள தகுதி? ஒரு மனம், சில வரிகள் எழுதத் தூண்டியது; மற்றொன்று, எனது 'யோக்யதாம்சம் பற்றி அலசியது! தைரியமாகச் 'சரி' என்று சொல்லிவிட்டேன் பெரியவரிடம்! காரணம் : அளவு கடந்த பேரன்பும் பக்தியும் கொண்டவர்களான ஏகலைவன், அர்ச்சுனன், கண்ணப்பன் இவர்கள் ஒவ்வொருவராக என் மனக்கண்முன் பவனி வந்து என்னைக் குதூகலிக்கச் செய் தனர்! துணிந்தேன்! பக்தியே உருக்கொண்ட மழலைச் சொற்களை ரசிக்காதார் யார்? அமரர் கல்கியின் எழுத்தில் மயங்காதார் யார்? எந்த விஷயத்தையும், அவர் எடுத்தாளும் பாணி உள்ளதே அதுவும் உயர்தர இலக்கிய ஹாஸ்ய பாவத்துடன் தமக்கே உரிய சரளமான கொஞ்சும் தமிழ் நடையில் ஆஹா! அது மகா அற்புதம்! படிக்கப் படிக்க மன மகிழ்ச்சி ஏற்
பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/72
Appearance