ii படும். படித்துக்கொண்டே இருக்கலாம்போல் தோன்றும். சரித்திரம், பொருளாதாரம், விஞ்ஞானம், நாடகம், சங் கீதம், சிறு கதைகள், நவீனம், சரித்திர நவீனம், கட்டுரை கள், பிரயாணம், நாட்டியம், தத்துவம், வேதாந்தம், இதிகாச புராணக் கதைகள், நாட்டுப் பற்று, தேசீயப் பற்று, சினிமா உலகத்திலுள்ள கலைகள் அனைத்திலும் திறம்பட ஹாஸ்ய பாவத்துடனும் பொருள் செறிவுடனும் எடுத்தாளும் திறமை - புலமை ங இவருக்கே உரிய தனிச் சிறப்பு அம்சமாகும். இவை யாவும் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் அமைவது பூர்வ புண்ணிய விசேஷம். 'தமிழ்ப் பாட்டி'-சாக்ஷாத் சரஸ்வதி தேவியின் மறு அவதாரம் எனப் போற்றப்பட்ட - ஒளவைப் பிராட்டியைச் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?" எனக் கேட்டுச் சிரிக்க வைத்துக் குதூகலித்தாரே, அந்த ஞா பண்டிதனால் மட்டுந்தான் அப்படிச் செய்ய இயலும்! இத் தெய்வத்தின் பரிபூரண கடாக்ஷம் முழு அளவிலே வாய்த்த பேறு பெற்றவர் அமரர் 'கல்கி' . ஞானம். தெளிவு, வாக்கு வன்மை,சிலேடை, ஹாஸ்ய பாவம், சிரித்து மகிழ வைக்கும் படைப்புக்கள். பேச்சுக் கள். முதிர்ந்த கற்பனை எல்லா வயதினரையும் ஈர்த்துப் படிக்கத் தூண்டும் மனோபாவத்தோடு கூடிய எழுத்து எல்லாம் ஒரே இடத்தில் உள்ளன என்றால், இவற்றை மகான் 'கல்கி'யிடந்தான் காண்கிறோம். எண் சோதிட வல்லுநர்கள் அங்காரக கிரஹத்தை எண் 9 ஆல் குறிப்பர். 9 எண் பிறந்த நாளிலோ, கூட்டு எண்ணிலோ அல்லது பெயரிலோ -ஏதாவது ஒன்றில் மட்டும் இருந்தாலே பேரறிஞர், சர்வ வல்லமை பொருந்திய வர் என்பதாக எண் சோதிட நிபுணர்கள் சொல்கின்றனர். அமரர் 'கல்கி'யின் விஷயத்திலோ அவரது பிறந்த எண் 9; கூட்டு எண் 9; மேலும் பிறந்த தேதி 9 மாதம் 9 வருஷம் 1899 999 == 27 = 91 ஆரம்ப காலத்தில் KRISHNAMURTHY மூன்று 9க்கும் அநுசரணையாக அமைந்துள்ளது. 5; அதிலும் 41 அபார சக்தி வாய்ந்த எண்! 41 எண் 41
பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/73
Appearance