அதிர்ஷ்ட கவசம் கொடுத்து வாங்கினேன். மயிலாப்பூரில் 60,000 ரூபாய்க் குப் பங்களா வாங்கியிருக்கிறேன். பாங்கியில் 2 லட்சம் ரூபாய் ரொக்கமாயிருக்கிறது. உன்னை நான் மறந்துவிட வில்லை.இந்த வருஷம் கோடைக் காலத்துக்கு உதக மண்டலம் போகப் போகிறேன். உன்னை அழைத்துக் கொண்டு போகலாமென்று நினைத்தேன். என்ன சொல்லு கிறாய்?" என்றான் ராமு. 'கொஞ்சம் பொறு; கொஞ்சம் பொறு. சற்றே என் மூளை சரியான நிலைமைக்கு வரட்டும்" என்று சொல்லி, என் நெற்றியை இரண்டு முறை பிடித்துவிட்டேன். பிறகு சிறிது நிதானித்து, ஆமாம், உனக்கெப்படித்தான் அதிர்ஷ்டம் வந்தது? புதையல் கிதையல் எடுத்தாயா? இரகசியம் எதுவு மில்லாவிடில் சொல்லு" என்றேன். நல்லது. இந்தச் சந்தர்ப்பத்தில் இராமசாமியின் பழைய கதையைப்பற்றி உங்களுக்குச் சிறிது கூறவேண்டும். நானும் இராமசாமியும் ஒரே பள்ளிக்கூடத்தில் படித்த வர்கள். அந்த நாளிலிருந்து அவனுக்குத் 'துரதிர்ஷ்ட ராமு' என்ற பட்டப் பெயர் வழங்கலாயிற்று. பரீட்சை யில் மொத்தம் ஐந்து பாடங்கள் இருந்தால் அவன் நாலு நாலு பாடங்களில் 100க்கு 70, 80 வீதம் மார்க்கு வாங்குவான். ஒரு பாடத்தில்மட்டும் 34 மார்க்கு பெறு வான் (அதாவது பரீட்சை தேறுவதற்கு எவ்வளவு மார்க்கு வேண்டுமோ அதைவிட ஒன்றே ஒன்றுதான் குறைவாயிருக் கும்). ஆகவே, ஐந்தாவது வகுப்பில் என்னுடன் சேர்ந்து படித்த அவன், நான் பி.ஏ. பரீட்சையில் தேறியபோது, ஸ்கூல் பைனல் பரீ_ சைக்கு மூன்றாவது தடவையாகப் போனான். வழக்கம்போல் ஒரு பாடத்தில் ஒரு மார்க்கு குறைவினால் பரீடசை தவறிவிட்டது. பிறகு, அவன் வாழ்க்கைப் போராட்டத்தில் இறங்கி னான். அரசாங்க உத்தியோகத்தை அவன் எப்போதுமே வெறுத்து வந்த-ன். ஆயினும் அவனுக்குப் பெண்ணைக் கொடுத்த மாமனாரின் பிடிவாதத்தின்பேரில் ரெயில்வே கம் பெனியில் மாதம் 150 ரூபாய் சம்பளத்தில் உத்தியோகம்
பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/8
Appearance