உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 ஆனந்த ஓவியம் யார் என்று நினைக்கிறீர்கள்? என் பழைய நண்பன் இராம சாமிதான்! மன்னிக்க வேண்டும். என் பழைய நண்பன் இராம சாமியை மோட்டாரில் கண்டதில் என்ன அதிசயம் என்று உங்களுக்குத் தெரிந்திருக்க முடியாதல்லவா? அவன் மோட்டாரில் இருந்ததுமட்டுமே அதிசயமன்று; அது அவனுடைய சொந்த மோட்டாராயிருக்கலாமென்றும் தோன்றிற்று! அவனுடைய நடை, உடை பாவனைகள் அவ்வாறு இருந்தன. காதில் டால் வீசிய வைரக் கடுக்கண் ஜோடி இரண்டாயிரம் ரூபாய்க்குக் குறைவிலலை. நேவி புளூ சட்டைமட்டும் 60 ரூபாயிருக்கும். இவற்றிற்கேற்ப மற்றவையும். என்ன விந்தை! முகத்தில் களைகூட அல்லவா மாறிவிட்டது! கடைசியாக, நான் அவனைப் பார்த்தபோது முகத்திலே தரித்திர தேவி தாண்டவமாடிக்கொண் டிருந் தாள். ஒரு கப் காப்பிக்கென்று என்னிடம் ஒன்றே காலணா .ஒரு கடன் வாங்கிக்கொண்டு போனான். இப்போது அவன் முகத்திலே அஷ்ட லக்ஷ்மியும் (அல்லது எவ்வளவு லக்ஷ்மிகள் உண்டோ அவ்வளவு பேரும்) குடிகொண் டிருந்தார்கள். என்னைப் போல இருநூறு பேரை விலைக்கு வாங்கிவிடக் கூடியவனாய்த் தோன்றினான். அடே ராமு, கடைசியில் உனக்கு அதிர்ஷ்டம் அடித்து விட்டதா என்ன?" என்று கேட்டேன், ஆமாண்டா கிட்டு அதிர்ஷ்டமென்றால் சாமான்ய அதிர்ஷ்டமன்று, பெரும் புயற் காற்றைப்போல் அடித்து விட்டது!" என்றான். "உன்னைப பார்த்தால் அப்படித்தான் காண்கிறது. ஆனால், நீ உண்மையிலேயே நீ தானா? வேறு யாராவதா? நிஜத்தைச் சொல்" என்றேன் (என் மூளை எவ்வளவு கலங்கி யிருக்க வேண்டுமென்று இதிலிருந்தே நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம்). "நான், நானேதான். சந்தேகமேயில்லை. இது என் னுடைய சொந்த மோட்டார் வண்டிதான். 9000 ரூபாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/7&oldid=1721391" இலிருந்து மீள்விக்கப்பட்டது