உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 20 76 1. அதிர்ஷ்ட கவசம் எனக்கு ஆச்சரியத்தினால் பிரமித்துப்போய்விட்டேன்.தலை கிறுகிறுவென்று சுழன்றது. அவன் என்னைப் பிடித்துக் கொண்டிரா விட்டால் மயக்கம் போட்டுக் கீழே விழுந்திருப் பேன். மெதுவாகச் சமாளித்துக்கொண்டு மறுபடியும் உற்றுப் பார்த்தேன். கண்ணைத் துடைத்துக்கொண்டு பார்த்தேன் ! இராமசாமிதான்; சந்தேகமில்லை. மண்டை வெடித்துவிடும் போலிருந்தது (என்பதாக டாம்பீகம் கிருஷ்ணசாமி ஐயங்கார் எம்.ஏ.,பி.எல்., கதை சொல்ல ஆரம்பித்தார். அவரைச் சூழ்ந்து பத்துப் பன்னிரண்டு வக்கீல்கள் உட்கார்ந்திருந்தார்கள். அன்றைய தினம் நீதிபதியின் வீட்டு எருமை மாடு கன்றுக்குட்டி போட்ட காரணத்தினால் நீதிபதி வருவதற்கு நேரமாயிற்று. இதுதான் தருணமென்று டாம்பீகம் ஐயங்கார் தொடங்கி னார் தமது கதையை). சென்னைக் கடற்கரைச் சாலையில் காற்று வாங்கிக் கொண்டு - அதாவது மீன் நாற்றத்தை முகர்ந்துகொண்டு- ஒரு நாள் நடந்து சென்றேன். வழக்கம்போல் சாலையோர மாக வரிசையாய் மோட்டார் வண்டிகள் நின்றுகொண் டிருந்தன. அவ் நான் சாதாரணமாக வண்டிகளைக் கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. எனக்கும் மோட்டாருக் உங்களில் மோட்டார் பரம்பரையான பகைமை. வண்டி சொந்தத்திற்கு வாங்க முடியாதவர்கள் அனைவரும் என்னுடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதை நன்கறி வேன். ஆகையினால்தான் இதைத் தைரியமாக வெளியிடு கிறேன். ஆனால், இன்று தற்செயலாக அந்த வண்டிகளில் ஒன்றினுள்ளே என் பார்வை சென்றது. அங்கு இருந்தது. ஐ.ஓ.i-1 கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/6&oldid=1721390" இலிருந்து மீள்விக்கப்பட்டது