பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 ஆனந்த முதல் ஆனந்த வரை ஏதோ உதவினோம். அதற்கு இதுவா? என்று கூறிக் கொண்டே இருந்தார்கள். மாலை வந்தது. விளக்கேற்றும் நேரம் ஆயிற்று. கை விளக்கேற்றி வைத்துவிட்டார்கள். நன்கு இருட்டிய பின்பு லாந்தர் விளக்கு ஏற்றவேண்டும். பகலில் விளக்கை நன்கு துடைத்து உலர்த்தி வைத்திருந்தார்கள். விளக்கு ஏற்றப் பட்டது. நன்கு எரிந்துகொண்டிருந்த வேளையில் வீட்டுக்கு வந்த ஒருவர் கை, கால் கழுவிக்கொண்டு வந்து கையை வீசினார். ஒரு துளி லாந்தர் கண்ணாடி மேல் பட்டது. அவ்வளவுதான்; படீர்', என்று கண்ணாடி உடைந்தது. உடனே அம்மா என்னைப் பார்த்தார்கள்; பேசினார்கள். ‘நான் சொன்னேன் பார்த்தாயா! மூன்றணா சோடா புட்டிக் காக ஐந்தணா கண்ணாடி போயிற்று. போய் அவரை உடனே அழைத்துக் கொண்டு வா. மிகுதியை எடுத்துப் போகச் சொல். அப்போதே எடுத்துப் போகச் சொன்னேன். அவர் சென்று விட்டார். நம் வீட்டில் இருந்ததால் தவறி இரண்டொருவருக்கு உடைத்துக் கொடுத்தோம். அதன் பயன்தான் இது. நமக்கு உரிமை அல்லாததை நாம் விரும்பி னால் ஒற்றைக்கு இரட்டையாக நமக்கு நட்டம்தான் வந்து சேரும். உ.ம். அவரை அழைத்து வா என்று கூறினார்கள். நான் ஒடி அவரை அழைத்து வந்தேன். வந்தவரிடம் எல்லா வற்றையும் சொன்னார்கள், அம்மா உடைந்த கண்ணாடி யைக் காட்டி உம்மால் எனக்கு எவ்வளவு நட்டம் பார்த்தீர் களா? மூன்றணா சோடாவுக்கு ஐந்தணா கண்ணாடி? அது தான் வேண்டாம் என்றேன். உடனே எடுத்துச் செல்லுங் கள்’ என்றார்கள். அவர் தயங்கினார். பக்கத்தில் உள்ள வர் காரணம் சொன்னார். இதை இவர் வீட்டிற்கு எடுத்துச் சென்றால் வீட்டில் அவர் மனைவி அதற்கு ஏன் செலவு செய் தாய்?’ என்று ஏசுவார். அதனால்தான் பயப்படுகிறார், சரி நான் எடுத்து வைக்கிறேன். நாளை நீ எடுத்துக்கொண்டுபோ